சூறாவளி ‘பாவி’ ஏற்படுத்திய பயங்கரத் தாக்கம்: பிலிப்பைன்ஸில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மண்சரிவு – 15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
‘பாவி’ (Bavi) என்று அழைக்கப்படும் சக்திவாய்ந்த சூறாவளி (பிலிப்பைன்ஸில் ‘இந்தே’ என அறியப்படுகிறது) காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர மண்சரிவுகளில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சூறாவளியானது பிலிப்பைன்ஸ் நாட்டின் மீது நேரடியாகக் கரையைக் கடக்கவில்லை என்ற போதிலும், அதன் வெளிப்புறத் தாக்கத்தினால் அங்கு கொட்டித் தீர்க்கும் அதிபயங்கர கனமழை காரணமாகவே இந்த மோசமான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸின் மலபதான் (Malapatan) பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 10 […]










