இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி அம்மா அவர்கள், வயது மூப்பு காரணமாக நேற்று தனது 88 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, பல தசாப்தங்களாக ஒட்டுமொத்த இந்திய இரசிகர்களையும் தனது காந்தக் குரலால் கட்டிப்போட்டிருந்தவர் எஸ்பி. ஜானகி. இவரது அசாத்திய திறமைக்காக 4 முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் அன்னாரின் உடல் இன்று பொதுமக்கள் மற்றும் இரசிகர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3 மணியளவில் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகி, ‘கனியனகுந்தி’ என்ற இடத்தில் முழு அரசு மரியாதையுடன் அன்னாரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக கர்நாடக மாநில அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவரது மறைவு ஒட்டுமொத்த இசை உலகிற்கும் பேரிழப்பாகும்.




