வியட்நாமிற்குச் சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகள் பயணித்த படகு திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக இவர்கள் அனைவரும் வியட்நாமிற்குச் சுற்றுலாச் சென்றிருந்த போதே இந்த விபத்து நேரிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து வியட்நாம் மீட்புக்குழுவினர் விரைந்து செயல்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருவதற்கான தீவிர ஏற்பாடுகள் தூதரக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post Views: 67




