நாட்டின் 5 முக்கிய போதனா வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!

நாட்டின் முக்கிய வைத்தியசாலைகளின் நிர்வாகத்தை மேலும் வினைத்திறனாக்கி, மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் 5 முன்னணி போதனா வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழுவின் அனுமதிக்கமைய, சிரேஷ்ட நிர்வாகத் தரத்தைச் சேர்ந்த இந்த அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் சுகாதார அமைச்சரினால் நேற்று (02) உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.

புதிய பணிப்பாளர்கள் விவரம்:

  • தென் கொழும்பு (களுபோவில) போதனா வைத்தியசாலை: வைத்தியர் டபிள்யூ. எம். யூ. எஸ். விஜேமான்ன
  • வட கொழும்பு (ராகம) போதனா வைத்தியசாலை: வைத்தியர் டி. ஏ. கே. பெரேரா
  • கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை: வைத்தியர் டபிள்யூ. ஏ. பி. பி. ரத்னசேகர
  • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை: வைத்தியர் ஜீ. சுகுணன்
  • பேராதனை போதனா வைத்தியசாலை: வைத்தியர் டபிள்யூ. எம். சீ. எம். விஜேசிங்க

சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய பணிப்பாளர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Share the Post:

Related Posts