திருகோணமலை மாவட்ட பால் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட பால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் (02) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
கந்தளாய், தம்பலகாமம், மொறவெவ, குச்சவெளி, கிண்ணியா, புல்மோட்டை மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசங்களில் பால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான மேய்ச்சல் தரை இன்மைக்குத் தீர்வு காணும் நோக்கில், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளை ஒருங்கிணைத்து இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள், கால்நடை வளங்கள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.




