கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்ற விழா ஒன்றின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்விபரீத துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான பின்னணி மற்றும் காரணம் என்ன என்பது தொடர்பில் டொரண்டோ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Views: 110




