May 21, 2026

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு மாதாந்த கல்வி நிதியுதவி: ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை!

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், அவர்களுக்கு மாதாந்த கல்வி நிதியுதவி வழங்குவது குறித்து ஜனாதிபதி நிதியம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (20) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முக்கிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே மற்றும் தேசிய லொத்தர் சபை (NLB), அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) ஆகியவற்றின்

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு மாதாந்த கல்வி நிதியுதவி: ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை! Read More »

யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமையால் நேர்ந்த துயரம்: திருமணமான 4 மாதங்களில் 19 வயது இளம் பெண் உயிர் மாய்ப்பு!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி என்ற 19 வயதுடைய இளம் பெண், சீதனக் கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக நேற்று (20) தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணும் அவரது கணவரும் கடந்த இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே இவர்களது திருமணம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், இவர்களது காதரையோ அல்லது திருமணத்தையோ கணவனின்

யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமையால் நேர்ந்த துயரம்: திருமணமான 4 மாதங்களில் 19 வயது இளம் பெண் உயிர் மாய்ப்பு! Read More »

தலைமறைவாக இருந்த பெரும் குற்றவாளியைச் சாமர்த்தியமாகக் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது!

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு, நீண்டகாலமாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியைச் சாமர்த்தியமாகக் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு ஜனாதிபதியினால் விசேட கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் திரு. தினேஷ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு ஜனாதிபதியின் பாராட்டைப் பெற்றுக்கொண்டவராவார். களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற குறித்த பெரும் குற்றச்சம்பவத்தின் பின்னர், பொலிஸாரின் கண்களில் படாமல் நீண்டகாலமாகத் தப்பித் திரிந்த குற்றவாளியை, திரு.

தலைமறைவாக இருந்த பெரும் குற்றவாளியைச் சாமர்த்தியமாகக் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது! Read More »

கல்முனை ஆதார வைத்தியசாலை சித்தி விநாயகர் ஆலய புனரமைப்புப் பணிகள் தீவிரம்; அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம்!

கல்முனை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் சைவசமய ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட மிகப்பழைமை வாய்ந்த ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனருத்தாரண (மறுசீரமைப்பு) வேலைகள் தற்போது மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆலய புனரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் அவர்கள், வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் அவர்களுடன் இணைந்து அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது திருப்பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் மற்றும்

கல்முனை ஆதார வைத்தியசாலை சித்தி விநாயகர் ஆலய புனரமைப்புப் பணிகள் தீவிரம்; அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம்! Read More »

உஹனையில் சோகம்: கால்வாயில் நீராடச் சென்ற 70 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

அம்பாறை – உஹனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பெலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (20) மதிய வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் உஹனை, தெமடமல்பெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த பர்னாட் பெரேரா (வயது 70) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் உஹனை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அன்னாரது சடலம் தற்போது அம்பாறை பொது வைத்தியசாலையின் சவக்காலையில்

உஹனையில் சோகம்: கால்வாயில் நீராடச் சென்ற 70 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! Read More »

மலையக மக்களின் காணி உரிமைக்காகத் தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு 140 கி.மீ நடைபயணம்; 7 வயதுச் சிறுவன் சாதனைத் தொடக்கம்!

மலையக மக்களின் நீண்டகால நில மற்றும் காணி உரிமைகளை வென்றெடுப்பதையும், இவ்விடயம் குறித்து தற்போதைய அரசாங்கத்திற்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 7 வயதுடைய சிறுவன் பிரேமராஜா கார்கி தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நெடும் பயணத்தை ஆரம்பித்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) இலங்கை அலுவலகத்திற்கும் தமது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைக் கையளிப்பதற்காகவே இந்த விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை

மலையக மக்களின் காணி உரிமைக்காகத் தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு 140 கி.மீ நடைபயணம்; 7 வயதுச் சிறுவன் சாதனைத் தொடக்கம்! Read More »

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம்  விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம்  கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெலிகொம்  அருகில் புதன்கிழமை(20) மாலை  மேற்கொள்ளப்பட்ட திடீர்  சுற்றிவளைப்பின் போது குறித்த  முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்   சந்தேகத்தின் அடிப்படையில்  கைதானார். 50  வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 10 கிராம் 130 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் பணப்பை ,ஒரு

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம்  விசாரணை முன்னெடுப்பு Read More »

குப்பை கூழங்களால் துர்நாற்றம்-கல்முனை கண்ணகி அம்மன் காணியில் சம்பவம்

பாறுக் ஷிஹான் கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் கோவில் காணியின் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு மருங்கிலும் குப்பை கூழங்கள்களால் நிரம்பி வழிகின்றன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியால் உடற்பயிற்சிக்கா செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இது தவிர அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கும் குறித்த குப்பை கூழங்கள் காற்றினால் பரவி விழுகின்றன. மேலும் குறித்த

குப்பை கூழங்களால் துர்நாற்றம்-கல்முனை கண்ணகி அம்மன் காணியில் சம்பவம் Read More »

30 ரூபாய் கூடுதல் லாபத்திற்கு ஆசைப்பட்டு 5 லட்சம் ரூபாய் அபராதம் கட்டிய நுவரெலியா வர்த்தகர்!

சுற்றுலா நகரமான நுவரெலியாவில், அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் (ரூ. 500,000) பாரிய அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. வெறும் 30 ரூபாய் மேலதிக லாபத்தைப் பெறுவதற்காக, வாடிக்கையாளர்களை ஏமாற்றி விதிகளுக்கு முரணாகச் செயற்பட்ட கடை ஒன்றுக்கே இந்த அதிரடித் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா நகரில் உள்ள குறிப்பிட்ட கடையில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்குக்

30 ரூபாய் கூடுதல் லாபத்திற்கு ஆசைப்பட்டு 5 லட்சம் ரூபாய் அபராதம் கட்டிய நுவரெலியா வர்த்தகர்! Read More »

யாழில் சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை உறுதி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறை பெண் விரிவுரையாளர் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இக்கொலை தொடர்பான திடுக்கிடும் பின்னணித் தகவல்களும் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட விரிவுரையாளரின் மகன் அண்மையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்தே இக்கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முறைப்பாட்டையடுத்து, விரிவுரையாளரின் பாசையூரிலுள்ள (பாண்டியன்தாழ்வு) வீட்டிற்குச் சென்ற பொலிஸார் அங்கு அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது வீட்டின்

யாழில் சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை உறுதி! Read More »