• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • தலைமறைவாக இருந்த பெரும் குற்றவாளியைச் சாமர்த்தியமாகக் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது!

தலைமறைவாக இருந்த பெரும் குற்றவாளியைச் சாமர்த்தியமாகக் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது!

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு, நீண்டகாலமாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியைச் சாமர்த்தியமாகக் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு ஜனாதிபதியினால் விசேட கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் திரு. தினேஷ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு ஜனாதிபதியின் பாராட்டைப் பெற்றுக்கொண்டவராவார்.

களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற குறித்த பெரும் குற்றச்சம்பவத்தின் பின்னர், பொலிஸாரின் கண்களில் படாமல் நீண்டகாலமாகத் தப்பித் திரிந்த குற்றவாளியை, திரு. தினேஷ் தனது கடமை நேரத்தில் மிக நுணுக்கமாகவும் சாதுரியமாகவும் செயற்பட்டுக் கைது செய்திருந்தார்.

இவரது இந்த அர்ப்பணிப்புள்ள மற்றும் துணிச்சலான சேவையைப் பாராட்டி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களினால் இவருக்கான விசேட வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஜனாதிபதியின் கரங்களினால் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டது.

ஒரு சாதாரண பொலிஸ் உத்தியோகத்தரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடமை உணர்வானது நாட்டின் உயரிய மட்டத்தில் இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டமையானது, ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தங்களது கடமைகளைச் செவ்வனே செய்யப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

Share the Post:

Related Posts