May 21, 2026

மட்டக்களப்பு சிறையில் பிள்ளையானுடன் ராஜபக்ஷக்கள் ரகசிய பேரம்: நீதிமன்றில் திலிப பீரிஸ் அதிரடி வெளிப்படுத்தல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று (மே 20) இந்த விபரம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றில் அரசாங்கத் தரப்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் திலிப பீரிஸ் இந்த அதிரடி வெளிப்படுத்தல்களை மேற்கொண்டார். நீதிமன்றில் திலிப பீரிஸ்

மட்டக்களப்பு சிறையில் பிள்ளையானுடன் ராஜபக்ஷக்கள் ரகசிய பேரம்: நீதிமன்றில் திலிப பீரிஸ் அதிரடி வெளிப்படுத்தல்! Read More »

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு!

புங்குடுதீவு உலக மையத்தின் ஏற்பாட்டில், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் அவசரத் தேவைக்காக அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் திருமதி நளாயினி அருள்பாலா அவர்களின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உடன்பிறப்புக்களான பாஸ்கரன், கிருபாயினி மற்றும் சண்முகாயினி ஆகியோரின் முழுமையான நிதியுதவியுடன் இப்பொருட்கள் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளன. புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் விடுத்திருந்த அவசர வேண்டுகோளுக்கிணங்க, வைத்தியசாலையின் அத்தியாவசிய உபயோகத்திற்காக உடனடியாகத் தேவைப்பட்டிருந்த ஒரு

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு! Read More »

வவுனியாவில் அதிர்ச்சி: நடத்துனர் இன்றி பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்து!

வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்து ஒன்று, நடத்துனர் (கொண்டக்டர்) இல்லாமலேயே பயணிகளுடன் ஆபத்தான முறையில் பயணித்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6.30 மணியளவில் செட்டிக்குளம் நோக்கிப் பயணிப்பதற்காக இ.போ.ச பேருந்து ஒன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இப்பேருந்து வீரபுரம் வீதி ஊடாகச் சென்றுகொண்டிருந்த போது, அதில் கடமையில் இருந்த நடத்துனர் கடுமையான மதுபோதையில் இருப்பதாக,

வவுனியாவில் அதிர்ச்சி: நடத்துனர் இன்றி பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்து! Read More »

மட்டக்களப்பில் அரசியல் திருப்பம்: ஜனாதிபதி அநுரவுக்கு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முழு ஆதரவு!

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தனது அரசியல் நிலைப்பாட்டில் 180 பாகை அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இவ்வளவு காலமும் தீவிர ராஜபக்ஷ ஆதரவாளராக அறியப்பட்ட அவர், தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தனது முழுமையான ஆதரவை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்த போது, திரைமறைவில் இடம்பெற்ற சுவாரசியமான பின்னணித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு தேரர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, “என்னைச்

மட்டக்களப்பில் அரசியல் திருப்பம்: ஜனாதிபதி அநுரவுக்கு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முழு ஆதரவு! Read More »

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளினி கழுத்து நெரிக்கப்பட்டே கொலை: நீதிமன்றில் சட்ட வைத்திய அறிக்கை சமர்ப்பிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன், கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கின் மரண விசாரணை, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதன்போது, உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சாட்சியமளித்த பொலிஸார், “விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம், அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளினி கழுத்து நெரிக்கப்பட்டே கொலை: நீதிமன்றில் சட்ட வைத்திய அறிக்கை சமர்ப்பிப்பு! Read More »

/வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை யோகேந்திரகுமார் தவிசாலினி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் இந்த 17 வயது மாணவி, சர்வதேச மல்யுத்த அரங்கில் தடம் பதிக்கவுள்ளமை பெருமிதமானது. கண்டி, திகன பகுதியில் நடைபெற்ற ஆசிய மட்ட மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிப் போட்டியில் தவிசாலினி முதலிடத்தைப் பெற்று அசத்தினார். இதன் மூலமாகவே வியட்நாம் போட்டியில் 69-73 கிலோகிராம் எடைப் பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகைமையை அவர் உறுதி செய்தார். தவிசாலினியுடன் இணைந்து மேலும் 11 வீர, வீராங்கனைகள்

/வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை யோகேந்திரகுமார் தவிசாலினி தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read More »