• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • உஹனையில் சோகம்: கால்வாயில் நீராடச் சென்ற 70 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

உஹனையில் சோகம்: கால்வாயில் நீராடச் சென்ற 70 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

அம்பாறை – உஹனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பெலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (20) மதிய வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் உஹனை, தெமடமல்பெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த பர்னாட் பெரேரா (வயது 70) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் உஹனை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அன்னாரது சடலம் தற்போது அம்பாறை பொது வைத்தியசாலையின் சவக்காலையில் வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் கீழும் மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.பி. கஸ்தூரி ஆரச்சி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பண்டார திஸாநாயக்க ஆகியோரின் மேற்பார்வையில், உஹனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமித் குணவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share the Post:

Related Posts