May 17, 2026

காத்தான்குடி பொதுச் சந்தைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் திடீர் விஜயம்: குறைபாடுகளைக் கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், காத்தான்குடி பொதுச் சந்தையின் தற்போதைய நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக இன்று (17) திடீர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச். அஸ்பர் அவர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த விஜயத்தின் போது, சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் அங்கு நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது, பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களை நேரில் சந்தித்த

காத்தான்குடி பொதுச் சந்தைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் திடீர் விஜயம்: குறைபாடுகளைக் கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை Read More »

யாழில் பெரும் சோகம்: பால் ஊட்டிய சில நிமிடங்களில் ஒன்றரை மாத இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒன்று பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒன்று, தாயார் பால் ஊட்டிய சில நிமிடங்களில் திடீரென விறைத்துப்போய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கீரிமலைப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற ஒன்றரை மாத பெண் குழந்தையே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி (23.03.2026) தாயொருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்நிலையில்

யாழில் பெரும் சோகம்: பால் ஊட்டிய சில நிமிடங்களில் ஒன்றரை மாத இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒன்று பரிதாபமாக உயிரிழப்பு Read More »

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சேவைகளை விரிவுபடுத்த துரித நடவடிக்கை!

ஆதார வைத்தியசாலையின் தரம் மற்றும் நோயாளர்களுக்கான மருத்துவச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு துரித அபிவிருத்திப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன கட்டிடத் தொகுதியில் அத்தியாவசிய மருத்துவப் பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கான அவசர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேச பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளை மிகவும் வினைத்திறனான முறையில் நிவர்த்தி செய்யும் பொருட்டும், நோயாளர்களின் அதிகபட்ச நலனைக் கருத்திற்கொண்டும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தற்போது சில முக்கிய பிரிவுகளை மறுசீரமைக்கும் பணிகளை

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சேவைகளை விரிவுபடுத்த துரித நடவடிக்கை! Read More »

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள் ஜனாதிபதி அனுசரணையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்.!

மறுமலர்ச்சி மன்றத்திடம் ஆதம்பாவா எம்.பி உறுதி.! அஸ்லம் எஸ்.மௌலானா சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் அனுசரணையுடன் தன்னால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்திடம் உறுதியளித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகளிடையான முக்கிய சந்திப்பு நேற்று சனிக்கிழமை (16) காலை அவரது மாளிகைக்காடு அலுவலகத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும்

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள் ஜனாதிபதி அனுசரணையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்.! Read More »

நல்லைக் கந்தன் மகோற்சவ சம்பிரதாயம்: யாழ் மாநகர சபையிடம் பத்திரிகையும் காளாஞ்சியும் கையளிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ திருவிழா பத்திரிகையும், காளாஞ்சியும் தேவஸ்தானத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையிடம் இன்று (17) சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. நல்லூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தினரால் பாரம்பரிய வழக்கப்படி கொண்டுவரப்பட்ட திருவிழா பத்திரிகை மற்றும் காளாஞ்சி என்பனவற்றை, யாழ் மாநகர சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பக்திப் பூர்வமாக உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். நல்லைக் கந்தனின் வருடாந்த பெருந்திருவிழா ஆரம்பமாவதற்கு முன்னதாக, அதற்கான பத்திரிகையை மாநகர சபையிடம் கையளித்து,

நல்லைக் கந்தன் மகோற்சவ சம்பிரதாயம்: யாழ் மாநகர சபையிடம் பத்திரிகையும் காளாஞ்சியும் கையளிப்பு! Read More »

களனி ரயில் விபத்து: தண்டவாள ஆணிகளைக் கழற்றிய போதைக்கு அடிமையான இளைஞர் கைது – வீட்டில் பாரிய உபகரணங்கள் மீட்பு

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (16) அதிகாலை இடம்பெற்ற பாரிய ரயில் விபத்தைத் தொடர்ந்து, ரயில் பாதையின் ஆணிகளைக் கழற்றி சதிவேலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலிருந்து பல முக்கிய உபகரணங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பொல்கஹவெலவிலிருந்து களுத்துறை தெற்கு நோக்கி பயணித்த பயணிகள் ரயில் தடம் புரண்டு, அதன் ஒரு பெட்டி தலைகீழாகக் கவிழ்ந்ததில் 12 பயணிகள் காயமடைந்திருந்தனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸாரால் வனவாசல பகுதியைச்

களனி ரயில் விபத்து: தண்டவாள ஆணிகளைக் கழற்றிய போதைக்கு அடிமையான இளைஞர் கைது – வீட்டில் பாரிய உபகரணங்கள் மீட்பு Read More »

மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில்  மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கல்லடி புதிய டச்பார் வீதியை; சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வாவியில் சம்பவ தினமான இன்று காலை 6.30 மணியளவில் வழமைபோல மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கியதையடுத்து அதனை மீனவர்

மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு Read More »

அத்துருகிரியவில் சட்டவிரோத உதிரிப்பாக மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர் கைது!

எவ்வித சட்டபூர்வ அனுமதிப்பத்திரங்களும் இன்றி, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட இரண்டு சொகுசு மோட்டார் சைக்கிள்களைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) அதிகாலை அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லினியம் சிட்டி (Millennium City) வீட்டுத் தொகுதிப் பகுதியில், மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் முன்னெடுத்த விசேட சோதனையின் போதே இந்த சந்தேகநபர் வலையிலகப்பட்டுள்ளார். இதன்போது, எவ்வித இறக்குமதி ஆவணங்களும் இன்றி

அத்துருகிரியவில் சட்டவிரோத உதிரிப்பாக மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர் கைது! Read More »

நாம் ஏற்றும் சுடர் வெறும் சடங்கு அல்லநீதிக்கான அறவழி போராட்டம்- தவிசாளர்  இ.ரூபசாந்தன் .

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி – கல்முனை பிரதான வீதியில் சவளக்கடை தாபாலகத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு நாவிதன்வெளி தவிசாளர்  இ.ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றது. நினைவு  சுடரினை ஏற்றி வைத்த பின்னர் தவிசாளர் கருத்து தெரிவிக்கையில். இன்று நாம் ஒரு கனத்த இதயத்தோடு இங்கு கூடியிருக்கிறோம். ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் ஆறாத வடுவாகவும், தீராத துயரமாகவும் நிலைபெற்றிருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு வாரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். இந்த மண்ணுக்காகவும், எமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும்

நாம் ஏற்றும் சுடர் வெறும் சடங்கு அல்லநீதிக்கான அறவழி போராட்டம்- தவிசாளர்  இ.ரூபசாந்தன் . Read More »

போதைப்பொருள் விற்பனை சந்தேக நபர்கள் இருவர் கைது

பாறுக் ஷிஹான் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை)  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போது வீடொன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்கள்   போதைப்பொருட்களுடன் கைதாகினர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்

போதைப்பொருள் விற்பனை சந்தேக நபர்கள் இருவர் கைது Read More »