• Home
  • உள்ளூர் செய்திகள்
  • தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நிறைவடைந்தது ‘FIASTA’26’ கண்காட்சி!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நிறைவடைந்தது ‘FIASTA’26’ கண்காட்சி!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ‘தொப்பிகல’ வளாகத்தில் (Thoppigale Premises) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘FIASTA’26 – Grand Stall Exhibition’ கண்காட்சி நேற்று (23) மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.

நேற்று காலை 9:00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்ற இக்கண்காட்சியில், பலதரப்பட்ட உணவு அரங்குகள், கலை மற்றும் கலாச்சாரக் கண்காட்சிகள், சுவாரஸ்யமான பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் மாணவர்களின் விசேட கைவினைப் பொருட்கள் அடங்கிய பல வித்தியாசமான கண்காட்சி மூடீடுகள் (Stall-கள்) பார்வையாளர்களைக் கவர்ந்தன.

இவ்விழாவில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் பலரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் திரளாக வருகை தந்து நிகழ்வுகளைக் கண்டுகளித்து மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: