(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன் மனைவியான கொள்ளையர்கள் கொடுத்து மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட கல்லாற்றைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மார்ச் 20 ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லி காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் போராடிக் கொண்டிருந்த இளம் தாய் ஒருவரை மீட்டதுடன் அதே கிணற்றில்; இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் வயல் பகுதியில் அந்த இளம் தாயின் 3 வயதும் 4 மாதங்களை கொண்ட பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வவுணதீவு பாவகொடிச்சேனையைச் சேர்ந்த கணவன் மனைவி சூத்திரதாரிகள்
கடந்த பெப்பிரவரி 4ம் திகதி மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு பிற்பகல் ஒரு மணியளவில் சென்று அங்கு வவுணதீவு பாவக்கொடிச்சேனைக்கு தனது மகளிடம் செல்வதற்காக பஸ் வண்டிக்காக தனியாக காத்திருந்த 65 வயதுடைய வயோதிபப் பெண்ணிடம் கு மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையர்களான கணவன் மனைவி அந்த வயோதிப பெண்ணுக்கு அருகில் சென்று பேச்சுக் கொடுத்து விட்டு கவனம் அம்மா இங்கே கள்ளர்கள் நடமாட்டம் அதிகம் கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலியை அறுத்துக் போய்விடுவார்கள் என அறிவுரை வழங்கினார்
இதையடுத்து அவர் தனது கையில் இருந்த 2 பவுன் காப்பு மற்றும் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை கழற்றி தனது கைப்பையில் வைத்துக் கொண்ட போது அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு நித்திரைக்கு வழங்கும் குளுசைகளை கலந்து கொண்ட யூஸ்சை வழங்கி அவர் அதை குடித்து சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்ததையடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பி ஓடினர்.
அதன் பின்னர் சுமார் 4 மணித்தியாலத்தியாலத்தின் பின்னர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நீரிழிவு நோய் கொண்ட அவர் மனநிலை மற்றும் உடல் நிலை பாதிக்க தொடங்கி நோய் வாய் பட்ட நிலையில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தார்.
எனவே அவருக்கு கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்து காரணமாக அவருக்கு இந்த நோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்




