சாய்ந்தமருது (எம்.என்.எம்.அப்ராஸ்): சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் (IHRGM) அமைப்பின் முக்கிய கலந்துரையாடல் சாய்ந்தமருதில் நேற்று (23) வெற்றிகரமாக நடைபெற்றது.
அமைப்பின் தேசிய தலைவர் ஏ.ஆர். அமீர்கான் அவர்களின் வழிகாட்டலில்; பணிப்பாளர் எஸ்.எல். றசீட் மற்றும் பிரதி பணிப்பாளர்களான எம்.ஐ. அப்ரோஸ், எம்.பி. நூமைசா, எஸ்.எப். சஹானி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
முக்கிய முடிவுகள் & திட்டமிடுதல்:
- அம்பாறை மாவட்ட மக்களின் சமூக நலன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தல்.
- கல்முனைப் பிராந்தியத்தில் இரத்ததான முகாம்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சிரமதானப் பணிகளை ஏற்பாடு செய்தல்.
- மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகளை வழங்குவதோடு, இன நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்துதல்.
அத்துடன், மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்து, மக்களின் அன்றாட சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் IHRGM அமைப்பின் பிரதி பணிப்பாளர்களான எம்.எச்.எப். சாஹானா பானு, எம்.எப்.எப். அக்ஸா, இணைப்பாளர்களான ஜே.எப். சுஜிமா, எம்.ஆர்.எம். ரோசான், எம்.ஏ.சி.எம். பாயிஸ் கரீம், ஏ.எம்.எப். ரிபா, ஆர்.எம். ரூமி, ஐ. ஜாபீர் மற்றும் அங்கத்தவர் செயின் நௌபல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






