திருக்கோனேஸ்வரா ஆலயத்துக்கு விஜயம் செய்த ஆசிய இராஜதந்திரிகள்

ஹஸ்பர் ஏ.எச்-

திருகோணமலைக்கு விஜயம் செய்த ஆசிய நாட்டு இராஜதந்திரிகள் இன்று (10) திருகோணமலை திருக்கோனேஸ்வரா ஆலயத்துக்கு சென்று விசேட வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மலேசியா,இந்தோனேசியா,மியன்மார், தாய்லாந்து,வியட்நாம் ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுக் குழுவினர் குறித்த பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதன் போது முக்கிய இடமான திருகோணமலை சுற்றுலா துறை தொடர்பான விளக்கங்களை திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமார் தெளிவூட்டினார்.

திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்த தூதுக்குழு வினர் சுற்றுலா துறை முதலீட்டு வாய்ப்புக்கள் மூலமான பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

Share the Post: