• Home
  • உள்ளூர் செய்திகள்
  • கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடரும் அமைதிப் போராட்டம்: பொதுமக்களின் சேவைகளுக்குப் பாதிப்பின்றி எதிர்ப்பு நடவடிக்கை!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடரும் அமைதிப் போராட்டம்: பொதுமக்களின் சேவைகளுக்குப் பாதிப்பின்றி எதிர்ப்பு நடவடிக்கை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக இணைந்துகொண்ட 9 பெண் சிற்றூழியர்களின் நியமனம் மற்றும் ஆடை விவகாரம் தொடர்பாக, வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் நிரந்தர சேவையாளர்களின் கூட்டு தொழற்சங்கங்களுக்கும் இடையே எழுந்துள்ள நிர்வாகச் சிக்கல்களுக்கு விரைவான தீர்வை வலியுறுத்தி அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலையின் நிர்வாக ரீதியிலான தேவையற்ற குழப்பங்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இப் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை, வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கான ஏனைய மருத்துவ சேவைகளுக்கோ எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில், மிகவும் பொறுப்புணர்வுடனும் அமைதியான முறையிலும் இவ் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: