• Home
  • உள்ளூர் செய்திகள்
  • எயார்பஸ் கொடுக்கல்-வாங்கல் வழக்கு: சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்னிலை!

எயார்பஸ் கொடுக்கல்-வாங்கல் வழக்கு: சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்னிலை!

சர்ச்சைக்கரிய எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு கொடுக்கல்-வாங்கல் தொடர்பான நிதிச் சலவை வழக்கு விசாரணைக்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், இவ்வழக்கின் சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷ அண்மையில் பெயரிடப்பட்டிருந்தார்.

வழக்கின் பின்னணி & முக்கிய விவரங்கள்

  • விசாரணை: எயார்பஸ் கொடுக்கல்-வாங்கலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் குறித்து CID தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.
  • நீதிமன்ற நடவடிக்கை: வழக்கை விசாரித்த நீதவான், வழக்கின் மேலதிக விசாரணைகளை தொடர CID-க்கு உத்தரவிட்டதுடன், சந்தேகநபர் தொடர்பான அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையில் சமர்ப்பிக்குமாறு பணித்தார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணிகள் பலர் நாமல் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

Share the Post: