• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • ஆரையம்பதி உலக நாச்சியார் வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்கத் தவறினால் வரலாறு திரிக்கப்படும் அபாயம்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் எச்சரிக்கை!

ஆரையம்பதி உலக நாச்சியார் வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்கத் தவறினால் வரலாறு திரிக்கப்படும் அபாயம்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் எச்சரிக்கை!

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (மருத்துவர்) இளையதம்பி சிறிநாத், வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஆரையம்பதி கோவில்குளம் பகுதியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உலக நாச்சியார் தொடர்பான வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது என்றும், இதில் ஏற்படும் காலதாமதம் எதிர்காலத்தில் வரலாற்றுச் சான்றுகள் சிதைக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்படும் அபாயத்தை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இப்பகுதியின் வரலாற்று மரபுகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Share the Post: