• Home
  • உலகச் செய்திகள்
  • கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்த ஐசிஎஸ்டி (ICST) மற்றும் பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்த ஐசிஎஸ்டி (ICST) மற்றும் பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் சர்வதேச கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஐசிஎஸ்டி (ICST) பல்கலைக்கழகத்திற்கும் பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும் (IIUC) இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இவ்வொப்பந்தத்தில் ஐசிஎஸ்டி பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் துணைவேந்தர் பேராசிரியர் சிறியாணி விக்ரமசிங்க அவர்களும், பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் பொருளாளர் பேராசிரியர் டாக்டர் முஹம்மத் மஹ்பூபுர் ரஹ்மான் மற்றும் சர்வதேச விவகாரங்கள் பிரிவின் பதில் பணிப்பாளர் எம்.டி. மஹ்பூஸுர் ரஹ்மான் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான:

  • மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான சர்வதேச கல்விப் பரிமாற்றத் திட்டங்கள்
  • கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள்
  • பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் (IT) துறையிலான கல்வி ஒத்துழைப்புகள்
  • தொழில்முறைப் பயிற்சிகள்

ஆகியன இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன.

இக்கூட்டு நடவடிக்கையானது மாணவர்களின் உலகளாவிய கல்வி வாய்ப்புகளையும், சர்வதேச மட்டத்திலான ஆராய்ச்சித் திறன்களையும் மேலும் விரிவுபடுத்த பெருமளவில் உதவும் என இரு பல்கலைக்கழக நிர்வாகங்களும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

Share the Post: