• Home
  • உள்ளூர் செய்திகள்
  • நுவரெலியாவில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை: பல இடங்களில் திடீர் நிலச்சரிவு; பெருந்தோட்ட மக்கள் கடும் அசௌகரியம்!

நுவரெலியாவில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை: பல இடங்களில் திடீர் நிலச்சரிவு; பெருந்தோட்ட மக்கள் கடும் அசௌகரியம்!

நுவரெலியா: நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் கடும் மழை பெய்து வரும் நிலையில், மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் நிலச்சரிவுகளும் மண்மேடு சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் இடைவிடாத அடைமழை காரணமாக, பிரதான வீதிகளுக்கு மேலாக மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதுடன், பாறைகளும் உருண்டு விழுந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள தோடு, பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நிலச்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் இடர்முகாமைத்துவ மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், மலையகப் பாதைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share the Post: