August 4, 2026

எல்-நினோ காலநிலை காலநிலை மாற்றம் தொடர்பில் அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு தெழிவுபடுத்தல்.

தற்போது உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக இருக்கின்ற எல்-நினோ (El-nino) காலநிலை மற்றும் அதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் எதிர்காலத்தில் இது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பிரதேச மட்ட அதிகாரிகள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்குத் தெளிவுபடுத்தும் விதமான விசேட கருத்தரங்கு இன்றைய தினம் செவ்வாய்கிழமை(04.08.2026) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கில் உதவிப் பிரதேச செயலாளர், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய

எல்-நினோ காலநிலை காலநிலை மாற்றம் தொடர்பில் அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு தெழிவுபடுத்தல். Read More »

மட்டக்களப்பில் 5 மனித கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து 18 வரை விளக்கமறியல் –பொலிஸ் பாயிசுக்கு திறந்த பிடிவிறாந்து–

(கனகராஜா சரவணன் ) மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் இன்று  செவ்வாய்க்கிழமை (04) காணொளி ஊடாக உத்தரவிட்டு பெலிஸ் பாயிஸ் திறந்த பிடிவிறாந்;து பிறப்பித்து கட்டளையிட்டார் 2008

மட்டக்களப்பில் 5 மனித கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து 18 வரை விளக்கமறியல் –பொலிஸ் பாயிசுக்கு திறந்த பிடிவிறாந்து– Read More »

திருகோணமலை மான் பூங்காவில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை பிரதான கடற்கரை பகுதியை அண்டிய பிரதேசத்தில் மான் பூங்கா காணப்படுகிறது. குறித்த மான் இனங்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தந்து பொழுது போக்குகளை மான்களுடன் கழிக்கின்றனர். இயற்கை மான் இனங்களை பாதுகாப்பதற்காக பலதரப்பட்ட திட்டங்களை அரச தரப்பின் ஊடாக  மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடான ஒத்துழைப்புக்கள் காணப்படுகின்றன. அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு அதிகமாக காணப்படுகிறது.இதனால் சுற்றுலாத் துறை விருத்தி செய்யப்படுவதை திருகோணமலை மாவட்டத்தில்

திருகோணமலை மான் பூங்காவில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்  Read More »

திருகோணமலை சாஹிரா கல்லூரியில் தரம் 5 புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு நிறைவு: கங்கதலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் 2வது சமூகப் பணித் திட்டம் வெற்றி!

திருகோணமலை:செய்திகளைத் தருவதோடு நின்றுவிடாமல், எதிர்காலத் தலைமுறையின் கல்வியை வலுப்படுத்தும் உயரிய நோக்கில், கங்கதலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான 2ஆவது சமூகப் பணித் திட்டமான ‘தரம் 5 புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு’ இன்று (04.08.2026) திருகோணமலை சாஹிரா கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. காலை 8:00 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில் 88 மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இதில் சிறப்பு வளவாளராகக் கலந்துகொண்ட முள்ளிப்பொத்தானை

திருகோணமலை சாஹிரா கல்லூரியில் தரம் 5 புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு நிறைவு: கங்கதலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் 2வது சமூகப் பணித் திட்டம் வெற்றி! Read More »

கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்த ஐசிஎஸ்டி (ICST) மற்றும் பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் சர்வதேச கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஐசிஎஸ்டி (ICST) பல்கலைக்கழகத்திற்கும் பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும் (IIUC) இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடப்பட்டுள்ளது. இவ்வொப்பந்தத்தில் ஐசிஎஸ்டி பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் துணைவேந்தர் பேராசிரியர் சிறியாணி விக்ரமசிங்க அவர்களும், பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் பொருளாளர் பேராசிரியர் டாக்டர் முஹம்மத் மஹ்பூபுர் ரஹ்மான் மற்றும் சர்வதேச விவகாரங்கள் பிரிவின் பதில் பணிப்பாளர் எம்.டி. மஹ்பூஸுர் ரஹ்மான்

கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்த ஐசிஎஸ்டி (ICST) மற்றும் பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து! Read More »

நுவரெலியாவில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை: பல இடங்களில் திடீர் நிலச்சரிவு; பெருந்தோட்ட மக்கள் கடும் அசௌகரியம்!

நுவரெலியா: நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் கடும் மழை பெய்து வரும் நிலையில், மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் நிலச்சரிவுகளும் மண்மேடு சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாக பெய்து வரும் இடைவிடாத அடைமழை காரணமாக, பிரதான வீதிகளுக்கு மேலாக மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதுடன், பாறைகளும் உருண்டு விழுந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள தோடு, பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நிலச்சரிவு

நுவரெலியாவில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை: பல இடங்களில் திடீர் நிலச்சரிவு; பெருந்தோட்ட மக்கள் கடும் அசௌகரியம்! Read More »

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு- சந்தேகத்தில் கல்வி கற்றுவந்த யுவதி கைது

 பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24 அரை பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக  களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். முறைப்பாட்டையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த களுவாஞ்சிகுடி பொலிஸார், திங்கட்கிழமை (03) திருடப்பட்ட தங்க

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு- சந்தேகத்தில் கல்வி கற்றுவந்த யுவதி கைது Read More »

கினிகத்ஹேனையில் பயங்கர மண்சரிவு: வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளதாக மாவட்டச் செயலாளர் உறுதி!

நுவரெலியா மாவட்டம், கினிகத்ஹேனை பிரதேசத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் மண்சரிவில்ப்பட்டு நால்வர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கினிகத்ஹேனைப் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, குடியிருப்புக் வீடொன்றின் மீது திடீரெனப் பெரும் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் போது வீட்டிலிருந்த நால்வரே இவ்வாறு மண்மேட்டுக்குள் புதையுண்டு காணாமல் போயுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவு ஏற்பட்ட பகுதியைச் சென்றடைந்துள்ள பொலிஸார், இராணுவத்தினர்

கினிகத்ஹேனையில் பயங்கர மண்சரிவு: வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளதாக மாவட்டச் செயலாளர் உறுதி! Read More »

தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முழு ஒத்துழைப்பு – சஜித் பிரேமதாச

மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடாத்தப்பட்டு, அவற்றுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்குதல் உள்ளடங்கலாக தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்,

தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முழு ஒத்துழைப்பு – சஜித் பிரேமதாச Read More »

கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் வீதி விபத்தில் காயம்: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவர்கள் நேற்று (03) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாழங்குடா பகுதியில் அவர் பயணித்த வாகனம் எதிர்பாராதவிதமாக மாடொன்றுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த டாக்டர் ஜி. சுகுணன்

கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் வீதி விபத்தில் காயம்: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி! Read More »