• Home
  • உள்ளூர் செய்திகள்
  • கினிகத்ஹேனையில் பயங்கர மண்சரிவு: வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளதாக மாவட்டச் செயலாளர் உறுதி!

கினிகத்ஹேனையில் பயங்கர மண்சரிவு: வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளதாக மாவட்டச் செயலாளர் உறுதி!

நுவரெலியா மாவட்டம், கினிகத்ஹேனை பிரதேசத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் மண்சரிவில்ப்பட்டு நால்வர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கினிகத்ஹேனைப் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, குடியிருப்புக் வீடொன்றின் மீது திடீரெனப் பெரும் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் போது வீட்டிலிருந்த நால்வரே இவ்வாறு மண்மேட்டுக்குள் புதையுண்டு காணாமல் போயுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியைச் சென்றடைந்துள்ள பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் நுவரெலியா மாவட்ட நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share the Post: