• Home
  • உலகச் செய்திகள்
  • இந்தியாவில்,இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

இந்தியாவில்,இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தம்பலகாமம் குறூப் நிருபர் 

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையைச் சேர்ந்த 29 தொழில்முறை நிபுணர்களைக் கொண்ட குழுவினர், சிறப்புத் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2026 ஜூலை 06 முதல் 23ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டனர்.

  1. 2025 ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, இருதரப்பு திறன் மேம்பாட்டுச் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக, இலங்கைத் தொழில்முறை நிபுணர்களுக்காக ஆண்டுதோறும் 700 சிறப்புப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
  2. 18 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி நிகழ்ச்சி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள இந்திய இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனத்தால் (Indian Institute of Gem & Jewellery) இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் முழுமையான பெறுமதிச் சங்கிலியை உள்ளடக்கும் வகையில், தொழில்நுட்ப மற்றும் கருப்பொருள் சார்ந்த பல்வேறு அமர்வுகளை உள்ளடக்கியதாக பயிற்சித் திட்டம் அமைந்திருந்தது. நடைமுறை கருவிகள், வடிவமைப்பு மற்றும் 3D அச்சிடலுக்கு தயாரான வெளியீடுகள் தொடர்பிலும் பயிற்சி வழங்கப்பட்டதுடன், மேம்பட்ட திறன்களைப் பெறுவதற்கான வலுவான அடித்தளமும் ஏற்படுத்தப்பட்டது.
  3. அனுபவக் கற்றலின் ஒரு பகுதியாக, பயிற்சியில் பங்கேற்றவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண உற்பத்தி நிறுவனமான Valentine Silver International நிறுவனத்திற்கும் களப்பயணம் மேற்கொண்டனர். இதன் மூலம் நவீன உற்பத்தித் தொழில்நுட்பங்கள், வடிவமைப்பு மேம்பாட்டு நடைமுறைகள் மற்றும் இந்தியாவின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் நடைமுறையில் உள்ள நவீன சில்லறை விற்பனை முறைகள் தொடர்பில் நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொண்டனர்.
  4. இந்தச் சிறப்புப் பயிற்சித் திட்டம், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் தொழில்முறை திறன்களை வலுப்படுத்துவதற்கும், அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கும், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நிறுவன மற்றும் தொழில்துறை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான திறன் மேம்பாடு மற்றும் மக்கள் மைய பொருளாதார ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது.

Share the Post:

Related Posts