மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பஸ் ஒன்று இன்று (11) அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. புத்தள – மஹகொடய பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி மொனராகலை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், காயமடைந்த ஏனைய பயணிகளும் சிகிச்சைக்காக அதே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு மற்றும் அதிக வேகமே விபத்துக்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் புத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post Views: 8




