மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் சேகரிக்கப்படும் கழிவுகளை முகாமை செய்துவது தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமை செய்து அவற்றை அகற்றுவது தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறும் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை (11.08.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கரையோரம் பேணல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பொலிசார், கடற்படை, […]









