• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு: மேல் மாகாணத்தில் 48,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு!

டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு: மேல் மாகாணத்தில் 48,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு!

இலங்கையில் நடப்பு ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு வரையிலான கண்காணிப்புத் தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் ஜூலை மாதத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 29,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட மற்றும் மாகாண ரீதியான பாதிப்புகள்:

  • மேல் மாகாணம்: மிக அதிகமாக 48,244 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
  • கம்பஹா மாவட்டம்: 19,406 நோயாளர்கள்
  • கொழும்பு மாவட்டம்: 18,901 நோயாளர்கள்

119 பகுதிகள் அதிஅபாயம்: தற்போது நாடு முழுவதும் 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் உயர் அபாயப் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக தொழில்துறை மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share the Post: