August 13, 2026

வீதியில் வீசிச் செல்லப்பட்ட காயமடைந்த சிறுமி மீட்பு: விபரம் கோருகிறது வத்தேகம பொலிஸ்!

வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டிராவன பகுதியில், இன்று காலை முச்சக்கர வண்டியொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்ட அச்சிறுமி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது பெயர் ஆயிஷா என்றும், தந்தையின் பெயர் ராசிக் என்றும் அச்சிறுமி தெரிவித்துள்ளார். இச்சிறுமி தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக வத்தேகம பொலிஸ் நிலையத்திற்குத் தெரியப்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வீதியில் வீசிச் செல்லப்பட்ட காயமடைந்த சிறுமி மீட்பு: விபரம் கோருகிறது வத்தேகம பொலிஸ்! Read More »

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம், இன்று அதிகாலை வெகுவிமர்சையாக நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுடன் சுபமுகூர்த்தத்தில் ஆரம்பமானது. கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதலே விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் இடம்பெற்றன. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘அரோகரா’ கோஷத்துடன் எம்பெருமானை தரிசித்து வழிபட்டனர்.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்! Read More »

தம்பலகாமம் பொற்கேணி கிராமத்தில்  புதிய வீடு திறந்து வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம் –  தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள பொற்கேணி கிராமத்தில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக ரூபா 10 இலட்சம் பெறுமதியான புதிய வீடு ஒன்று பயனாளி குடும்பத்திற்கு இன்று (13)வழங்கி வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்புவிழா நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் ,சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளருமான எஸ்.சுதாகரன் மற்றும் சமுர்த்தி தலைமை முகாமையாளர்

தம்பலகாமம் பொற்கேணி கிராமத்தில்  புதிய வீடு திறந்து வைப்பு Read More »

விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) (AASL) நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக (Security Marshal) வசந்தி முருகேசு நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பனங்காட்டு மண்ணில் பிறந்த வசந்தி முருகேசு அவர்கள் முருகேசு மனோன்மணி ஆகியோரின் புதல்வியாவார். இவர் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) (AASL) நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக (Security Marshal) நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையில், பெண்களுக்கான சமத்துவத்திலும் பிரதிநிதித்துவத்திலும் ஒரு வரலாற்றுச் சாதனையாக, வசந்தி முருகேசு அவர்கள் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) (AASL) நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக (Security

விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) (AASL) நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக (Security Marshal) வசந்தி முருகேசு நியமிக்கப்பட்டுள்ளார். Read More »

சொத்துக் கணக்கு விசாரணை: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆஜர்!

கொழும்பு | 13 ஆகஸ்ட் 2026 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, இன்று (13) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையில் ஆஜராகியுள்ளார். அவரது சொத்துக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சொத்துக் கணக்கு விசாரணை: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆஜர்! Read More »

டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு: மேல் மாகாணத்தில் 48,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு!

இலங்கையில் நடப்பு ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு வரையிலான கண்காணிப்புத் தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் ஜூலை மாதத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 29,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட மற்றும் மாகாண ரீதியான பாதிப்புகள்: 119 பகுதிகள் அதிஅபாயம்: தற்போது நாடு முழுவதும் 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள்

டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு: மேல் மாகாணத்தில் 48,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு! Read More »

மூதூரின் அடையாளத்தை பறைசாற்றும் ‘தடயம்’ அருங்காட்சியகத்தை ஆர்வத்துடன் பார்வையிட்ட பாலர் பாடசாலை மாணவர்கள்!

மூதூர் பிரதேசத்தின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘மூதூர் தடயம்’ அருங்காட்சியகத்தை, நெய்தல் நகர் பாலர் பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுப்பயணமாகச் சென்று பார்வையிட்டனர். மாணவர்களின் பாடசாலைக் கல்வியுடன் இணைந்த வகையில், மூதூரின் தொன்மையான வரலாறு, பாரம்பரியப் பொருட்கள், பழங்கால வாழ்வியல் முறைகள் மற்றும் பிரதேசத்தின் முக்கிய வரலாற்றுச் சான்றுகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இக் கல்விச் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மூதூரின் அடையாளத்தை பறைசாற்றும் ‘தடயம்’ அருங்காட்சியகத்தை ஆர்வத்துடன் பார்வையிட்ட பாலர் பாடசாலை மாணவர்கள்! Read More »

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் சுமுகமாக முடிவு: கலாச்சார ஆடையுடன் கடமைக்குத் திரும்பினர் கனிஷ்ட ஊழியர்கள்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற பெண் கனிஷ்ட சுகாதாரப் பணி உதவியாளர்களின் சீருடை தொடர்பான பிரச்சினை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குறித்த பணியாளர்கள் தமது கலாச்சார நடைமுறைகளைப் பேணி ஆடையணிந்து மீண்டும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர். பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பன்மைத்துவ அடையாளங்களைக் கொண்ட ஒரு நாட்டில், அனைவரது சமய, கலாச்சாரத் தனித்துவங்களையும் பண்பாட்டு அம்சங்களையும் மதித்து இடமளிப்பதே அமைதியான முறையில் நாடு ஒன்றிணைந்து முன்னேற வழிவகுக்கும் என்பது இங்கு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் சுமுகமாக முடிவு: கலாச்சார ஆடையுடன் கடமைக்குத் திரும்பினர் கனிஷ்ட ஊழியர்கள்! Read More »

தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் ஜனாதிபதிக்கும் புகழாரம் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைத் தவிசாளர்.

இந்த நாட்டின் கொள்கைகள் இந்த நாட்டின் சரியான சட்ட திட்டங்களுக்கு அமைய இந்த நாட்டின் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில் செயற்படுத்தப்படுகின்றன.  மண்முனை தென்னருவில் பற்றி பிரதேச சபையில் 2025 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 12ஆம் திகதி இந்த பிரதேசத்திற்கு ஓர் தலைமை பீடமாக இந்த பிரதேச சபைக்கு தவிசாளராக தேர்ந்தெடுத்தமைக்காக இந்த பிரதேச மக்களுக்கு இந்த சந்தர்ப்பத்திலும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச

தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் ஜனாதிபதிக்கும் புகழாரம் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைத் தவிசாளர். Read More »

இறக்காமத்தில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட ‘ரண்விமன’ சமுர்த்தி வீடுகள்!

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ‘ரண்விமன’ விசேட வீடமைப்பு திட்டத்தின் கீழ், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வீடற்ற வறிய குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் நேற்று (12) பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் MSM. றஸ்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. மஞ்சுள ரத்நாயக பிரதம அதிதியாகக்

இறக்காமத்தில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட ‘ரண்விமன’ சமுர்த்தி வீடுகள்! Read More »