• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வீதியில் வீசிச் செல்லப்பட்ட காயமடைந்த சிறுமி மீட்பு: விபரம் கோருகிறது வத்தேகம பொலிஸ்!

வீதியில் வீசிச் செல்லப்பட்ட காயமடைந்த சிறுமி மீட்பு: விபரம் கோருகிறது வத்தேகம பொலிஸ்!

வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டிராவன பகுதியில், இன்று காலை முச்சக்கர வண்டியொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட அச்சிறுமி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது பெயர் ஆயிஷா என்றும், தந்தையின் பெயர் ராசிக் என்றும் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.

இச்சிறுமி தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக வத்தேகம பொலிஸ் நிலையத்திற்குத் தெரியப்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share the Post: