• Home
  • உள்ளூர் செய்திகள்
  • தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு, 10 இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு, 10 இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு

ஹஸ்பர் ஏ ஹலீம் –

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு, 10 இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில்  நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன  ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்குப் படகுகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.

புயல் அனர்த்தத்தினால் மீன்பிடி உபகரணங்களை இழந்து பெரும் சிரமங்களை எதிர்நோக்கிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் நாயகம், திருகோணமலை மாவட்ட மீன்பிடித் துறைமுக அதிகாரிகள் மற்றும் மாவட்ட மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

Share the Post: