August 14, 2026

 இலங்கையின் 20 உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான அறிவுப் பரிமாற்றம் மற்றும் அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சி இந்தியாவில் ஹஸ்பர் ஏ ஹலீம் –

இலங்கையைச் சேர்ந்த 20 உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான அறிவுப் பரிமாற்றம் மற்றும் அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சி 2026 ஆகஸ்ட் 10 முதல் 14 ஆம் திகதி வரை இந்தியாவின் போபாலில் அமைந்துள்ள தேசிய நீதித்துறை அகாடமியில் (NJA) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதித்துறை செயல்பாடுகள் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளுதல், தலைமைத்துவம் மற்றும் மூலோபாயச் சிந்தனை, நிர்வாகத்தில் நேர்மை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல், நீதிமன்றங்களில் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றம், நீதிமன்றம் மற்றும் வழக்கு முகாமைத்துவம், விசாரணைக்கு முந்தைய நடைமுறைகள்

 இலங்கையின் 20 உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான அறிவுப் பரிமாற்றம் மற்றும் அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சி இந்தியாவில் ஹஸ்பர் ஏ ஹலீம் – Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மனிதப்பண்பியல் ஆய்வு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுணர்வு நிரலாக்கல் Vibe Coding பயிற்சிப் பட்டறை, 2026 ஆகஸ்ட் 13 ஆம் திகதி வியாழக்கிழமை, தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு, கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மனிதப்பண்பியல் ஆய்வு நிலையத்தின் ஏற்பாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI)

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை Read More »

எம்மினத்திற்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்திற்கும் ஆதாரமாக செம்மணி மனிதப் படுகொலை திகழ்கின்றது – ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ்

தாயக செயலணியின் ஏற்பாட்டில்; யாழ்ப்பாணம் செம்மணியில் ஆரம்பித்துள்ள செம்மணி மனிதப் புதைகுழியில் அநியாயமாகக் கொன்று புதைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கோரியும், நிகழ்த்தப்பட்ட மனிதப் படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை இறுக்கமான தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதை வலியிறுத்தும் நீதியின் ஓலம்-02 தொடர் போராட்டத்திற்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பில் எங்களது ஆதரவினை வழங்குவதுடன் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள அனைத்துப் போராளிகளும் இதற்கான முழு ஆதரவையும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கோள்கின்றோம். என ஜனநாயகப் போராளிகள்

எம்மினத்திற்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்திற்கும் ஆதாரமாக செம்மணி மனிதப் படுகொலை திகழ்கின்றது – ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் Read More »

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட நினைவேந்தல்  தமிழ் தேசிய பேரவையால் இன்று வெள்ளிக்கிழமை (14) வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு– Read More »

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா உத்தியோகபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் முன்னிலையில் எம்.எச். சுபைதா உம்மா தனது பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். அஸ்ஹர், முன்னாள் தவிசாளர் எம்.ஏ. ராஷிக், அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம் Read More »

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள் வழங்கி வைப்பு

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கி வைத்தார். டித்வா புயலினால் மீன்பிடிப் படகுகள் மற்றும் உபகரணங்களை இழந்து வாழ்வாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கிய மீனவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீண்டும் தமது மீன்பிடித் தொழிலை ஆரம்பித்து, வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீம, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு படகுகள் வழங்கி வைத்தனர். மேலும், திருகோணமலை மாவட்ட மீன்பிடித் துறைமுக அதிகாரிகள், மாவட்ட மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள் வழங்கி வைப்பு Read More »

திருகோணமலை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்கு  நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் தொடர்பான  மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் கடற்றொழில்,  நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருகோணமலை மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர,  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அத்துடன், கடற்றொழில், நீரியல் மற்றும்  கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண உதவிப் பணிப்பாளர், மாவட்ட அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், கடற்படையினர், பொலிஸார் மற்றும் மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும்  பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு, அவற்றுக்கு துறைசார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார். மேலும், மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடைய பிரச்சினைகள் நீண்டகாலம் தீர்வின்றி தொடராமல், அவற்றின் முன்னேற்றத்தை முறையாகக் கண்காணித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும்  அமைச்சர் வலியுறுத்தினார். இதன்போது, கடந்த மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. குறிப்பாக எரக்கண்டி களப்பு பகுதியில் மீன்பிடி மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்தல், தென்னமரவாடி துறைமுகம் மற்றும் லங்காபட்டுன பகுதிகளுக்கான புதிய பொலிஸ் காவல்நிலையங்கள் அமைத்தல், துறைமுகப் பகுதிகளில் மீன்பிடிப் படகுகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. கோட்பே மீன்பிடித் துறைமுகத்தின் Buffer Zone பகுதியை விடுவித்தல், துறைமுக வளாகத்தில் காணப்படும் அகற்றப்பட்ட 10 படகுகளை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது. சிறிய இயந்திரங்களைப் பயன்படுத்தும் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கையும் கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்பட்டது. காற்று அதிகமாக வீசும் காலங்களில் துடுப்புப் படகுகளைப் பயன்படுத்தி கடலுக்குச் செல்வதில் ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு, துறைமுகப் பகுதிக்குள் குறிப்பிட்ட எல்லைக்குள் சிறிய இயந்திரங்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கடற்படையுடன் மேலும் கலந்துரையாடி இறுதி முடிவொன்றை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதேபோன்று, புல்மோட்டை பிரதேச மீனவர்களின் மாடி வலை மீன்பிடி நடவடிக்கைகள், குறிப்பிட்ட தூர எல்லைக்குள் சிறிய படகுகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி, பலநாள் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தும் மீனவர்களின் ஆவண மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன. மீனவர்கள் தங்களது ஆவணங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை காரணமாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த சேவை மையமொன்றை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துதல், மீன்பிடி இறங்குதுறை அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், இக்பால் நகர் மீன்பிடி இறங்குதுறை காணிப் பிரச்சினை, கோட்பே மீன்பிடித் துறைமுகப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள், NAQDA நிறுவனத்தில் மீன்பிடிப் பரிசோதகர்கள் மற்றும் பௌதிக வளங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. சுற்றுலா வலயங்களில் மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத்துறைக்கும் மீன்பிடித்துறைக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளை அடையாளம் கண்டு, இரு துறைகளினதும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பிரச்சினையும் உரிய கவனமின்றி விடப்படக்கூடாது எனவும், ஒவ்வொரு பிரச்சினைக்கும் பொறுப்பான நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், கடற்றொழில் துறையின் அபிவிருத்தி என்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, துறைமுக முகாமைத்துவம், சட்டவிரோத மீன்பிடி கட்டுப்பாடு, சுற்றுலாத்துறை மற்றும் கடற்றொழில் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மீனவர்கள் தங்களது நிர்வாகப் பணிகளை இலகுவாக நிறைவேற்றுவதற்கான ஒருங்கிணைந்த சேவைகள், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உரிய அதிகாரிகளின் சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். திருகோணமலை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கடற்றொழில் அமைச்சு மாத்திரமன்றி, துறைமுக அதிகாரசபை, கடற்படை, பொலிஸ், NAQDA, NARA, இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மீனவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதுடன், அவற்றின் முன்னேற்றம் அடுத்தடுத்த மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட கடற்றொழில் சமூகத்தின் நீண்டகால மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கு துரிதமான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்காக அரச நிறுவனங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயற்படும் வகையில் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

திருகோணமலை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்கு  நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Read More »

மட்.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரிக்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா

கல்வி அமைச்சினால் கற்றல் செயல்பாடுகளை வினைத்திறனுடையதாக முன்னெடுக்கும் வகையில் தொடர்ச்சியாக அபிவிருத்தி பணிகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்வி வலையத்திற்கு உட்பட்ட ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் கனிஷ்ட பிரிவு மாணவர்களுக்கு 2 மில்லியன் ரூபா செலவில்  புதிய கற்பித்தல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கல்லூரியின் அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை(14.08.2026)  காலை விசேட  இறைவழிபாடுகளின் பின்பு இடம்பெற்றது இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி நீலமாதவானந்தாஜி, மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ரவி, மற்றும் மாநகர  சபை உறுப்பினர் ஆ.துதிஷ்கரன், வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விச் சமூகத்தினர் என பலர் கலந்து  கொண்டு அடிக்கலினை நாட்டி வைத்தனர்.

மட்.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரிக்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா Read More »

இலங்கை பெருந்தோட்ட இளைஞர்களுக்கு வலுவூட்டல்: CEWET புலமைப்பரிசில் திட்டத்தை 700 மாணவர்களுக்கு விரிவுபடுத்தும் இந்திய உயர்ஸ்தானிகரகம்

ஹஸ்பர் ஏ ஹலீம் – இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தின் சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்திய உயர்ஸ்தானிரகம் சிலோன் எஸ்டேட் வேர்க்கர்ஸ் எஜுகேஷன் டிரஸ்ட் (CEWET) புலமைப்பரிசில் வழங்கும் விழாவை 2026 ஆகஸ்ட் 10ஆம் திகதி தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்  சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டதுடன், இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய சந்தோஷ் ஜா, பிரதி உயர்ஸ்தானிகர், CEWET நிர்வாக

இலங்கை பெருந்தோட்ட இளைஞர்களுக்கு வலுவூட்டல்: CEWET புலமைப்பரிசில் திட்டத்தை 700 மாணவர்களுக்கு விரிவுபடுத்தும் இந்திய உயர்ஸ்தானிகரகம் Read More »

மைலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மைலத்த மடு மாதவனை, பண்ணையாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தமது நீண்ட கால மேச்சல் தரைப் பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை(14.08.2026) பாரிய அமைத்திவெளி ஆர்;ப்பாட்டத்த்pலர் ஈடுபட்டனர். Mannar Social and Economic Development Organization  எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டாத்திற் மேலும் வலுச்சேர்க்கும் முகமாக காணியை இழந்த மன்னார் மக்கள், யாழ்ப்பாணம் வலி வடக்கு மக்கள், முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய கேப்பாப்பிலவு மக்கள், மற்றும், மைலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் என

மைலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம். Read More »