August 14, 2026

 ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது

  இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய ஊழல் ஒழிப்புப் பிரிவினர் அதிரடி   நீதிமன்றில் ஆஜர்படுத்தத் தமன பொலிஸார் நடவடிக்கை பாறுக் ஷிஹான் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, 3,920 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர்   கைது செய்யப்பட்டுள்ளார். தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டம பகுதியில் அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது Read More »

ஜும்ஆப் பிரசங்க நேரத்தைக் சுருக்குமாறும் ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைக்குமாறும் பள்ளிவாசல்களுக்கு வேண்டுகோள்

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளின் நலன் கருதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தல் வெள்ளிக்கிழமை தொழுகையை பிற்பகல் 12.45 மணிக்கு முன் நிறைவு செய்ய ஆலோசனை பாறுக் ஷிஹான் தற்போது நாடு முழுவதும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், பரீட்சார்த்திகளின் நலனைக் கருத்திற்கொண்டு ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்கிக்கொள்ளுமாறும், பள்ளிவாசல்களில் வெளிப்புற ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள சகல பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கும் அறங்காவலர்களுக்கும்

ஜும்ஆப் பிரசங்க நேரத்தைக் சுருக்குமாறும் ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைக்குமாறும் பள்ளிவாசல்களுக்கு வேண்டுகோள் Read More »

ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழா: 70 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

கல்குடா (எஸ்.எம்.எம்.முர்ஷித்): ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்தில் வாழ்க்கைத்திறன் விருத்தி குறுங்கால கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 70 இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் பயிற்சி நிலைய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. “திறனை வளர்ப்போம், தலைமைத்துவத்தை உருவாக்குவோம், எதிர்காலத்தை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்நிகழ்வு, ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது. இக் குறுங்கால கற்கைநெறியின் போது, AI Tools & Goal Setting (செயற்கை நுண்ணறிவு தொழினுட்பக்

ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழா: 70 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு! Read More »

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்   பேசித் தீர்வு காணப்பட்டதாக ஆதம்பாவா எம்பி அறிவிப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இஸ்லாமியப் பெண்கள் ஸ்காப் (ஹிஜாப்) அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பான இனவாதச் செயற்பாடுகளுக்குத் தாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகத் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்தார். கல்முனை ‘யங் பேட்ஸ்’ ஜனாஸா நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (13) இரவு கல்முனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்   பேசித் தீர்வு காணப்பட்டதாக ஆதம்பாவா எம்பி அறிவிப்பு Read More »

வீரமுனைக் கிராமத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்

வீரமுனைக் கிராமத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய உறவினர்கள் பாறுக் ஷிஹான் அம்பாறை – வீரமுனைக் கிராமத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 232 அப்பாவித் தமிழ் மக்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  வீரமுனை நினைவுத் தூபியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வின்போது  அம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு

வீரமுனைக் கிராமத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் Read More »

வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்டு சிங்களத் திரைப்படம் உருவாக்கப் நடவடிக்கை

வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்டு சிங்களத் திரைப்படம் உருவாக்கப் நடவடிக்கை!கல்முனையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு; உள்ளூர் மக்களும் பங்கேற்பு பாறுக் ஷிஹான் சர்ச்சைக்குரிய வகையில் கைதாகிப் பின்னர் விடுவிக்கப்பட்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் புதிய சிங்களத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தற்போது கல்முனையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தின் முக்கிய கட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் புதன்கிழமை (12) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரைப்

வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்டு சிங்களத் திரைப்படம் உருவாக்கப் நடவடிக்கை Read More »

‘ஸ்பைடர் வுமன்’ வலை விரித்து தூக்கிய சாய்ந்தமருது பொலிஸார்

போதைப்பொருளுடன் கைதான  ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்)- கால் உடைந்த நிலையில் மீட்பு ‘ஸ்பைடர் வுமன்’ வலை விரித்து தூக்கிய சாய்ந்தமருது பொலிஸார்!3-வது மாடியிலிருந்து பாய்ந்து தப்பித்த போதைப்பொருள் தலைவி கால் உடைந்த நிலையில் கைது! பாறுக் ஷிஹான் போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு(76448)  கிடைத்த

‘ஸ்பைடர் வுமன்’ வலை விரித்து தூக்கிய சாய்ந்தமருது பொலிஸார் Read More »

மன்னார் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

மன்னார் மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  (12) பிற்பகல் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில், முன்னைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்டத்திலுள்ள மீனவ சங்கங்களின் சமாசங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளுடனும் மீனவ பிரதிநிதிகளுடனும் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். கலந்துரையாடலின் நோக்கம் மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் விளக்கமளித்தார். இதன்போது மன்னார் மாவட்டத்தின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. மன்னார் கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைந்து அடித்தள இழுவை முறையில் மீன்பிடிப்பதால் கடல் வளங்களும், மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளும் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக பவளப்பாறைகள், கடற்புல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் இயற்கை வாழிடங்கள் அழிக்கப்படுவதாகவும், திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அந்நாட்களில் உள்ளூர் மீனவர்களின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்திய இழுவைப் படகுகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார். சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய இழுவைப் படகுகள் தொடர்பில் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், எனினும் இவ்வாறான நடவடிக்கைகளால் கடல் வளங்களும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளும் பாதிக்கப்படுவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். மன்னார் மாவட்டத்தில் முறையான மீன்பிடித் துறைமுகம் இல்லாததால், கடுமையான காலநிலையின்போது மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதில் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், பலநாள் மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் படகுகளுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதி அவசியம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்படும் இந்திய இழுவைப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்குக்கூட போதுமான வசதி இல்லாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மன்னாரில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பினால் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. சிலாபத்துறை பகுதியில் நங்கூரமிடும் தளம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், உள்ளூர் மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து, அதிகாரிகள் ஊடாக சாத்தியக்கூறுகளை முறையாக ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் பல கடற்கரைப் பகுதிகளில் கடலரிப்பு தீவிரமடைந்துள்ளதால் மீன்பிடி இறங்குதுறைகள், கடற்கரைப் பாதைகள் மற்றும் மீனவர்களின் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ்வான பகுதிகளுக்குள் கடல்நீர் உட்புகும் நிலையும் காணப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தலைமன்னார் பியர், உப்புக்குளம்–ஜனதாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாக உள்ளதாகவும், மொத்தம் 13 இடங்கள் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கச்சத்தீவில் மீனவர்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு முறையான அனுமதி மற்றும் ஏற்பாடுகள் தேவைப்படுவதாகவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பில் அமைச்சர் கடற்படையினரிடம் விளக்கம் கோரியபோது, கச்சத்தீவில் பாதுகாப்பு தொடர்பான சில பிரச்சினைகள் காணப்படுவதாக கடற்படையினர் தெரிவித்தனர். எனினும், இவ்விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் உரிய பதில் வழங்கப்படும் என கடற்படையினர் தெரிவித்தனர். 2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை 72 மீனவர்களுக்கு Purse Seine வலை மூலம் மீன்பிடிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் அனுமதிகளின் எண்ணிக்கை 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக இம்முறையில் மீன்பிடித்து, அனுமதிப்பத்திரம் வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, அனுமதி கிடைக்காத மீனவர்களும் தங்களுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இந்த விடயம் தொடர்பில் சாதகமான பதிலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மன்னார் மாவட்டத்தின் ஏனைய மீன்பிடிப் பிரிவுகள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூர் இழுவைப் படகுகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இழுவை மீன்பிடி காரணமாக பாரம்பரிய மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்படுதல், மீன்பிடி உபகரணங்கள் சேதமடைதல் மற்றும் மீனவக் குழுக்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் தொடர்பிலும் மீனவர்கள் தமது கவலைகளை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இதற்கு மீனவ சமூகத்தினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மன்னார் மாவட்ட மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து மேம்படுத்துவதற்கும், கடற்றொழில் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார். இக்கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், துரைராசா ரவிகரன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த,

மன்னார் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் Read More »

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்!

(நூருல் ஹுதா உமர்) காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் அவ்வைத்தியசாலையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், காரைதீவு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் அஜந்தா உள்ளிட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது, வைத்தியசாலையின் நடப்புச் செயற்பாடுகள் மற்றும்

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்! Read More »

மட்டக்களப்பில் நடைபெற்ற மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஏற்பாட்டில் மாவட்ட பழைய செயலக மாநாட்டு  மண்டபத்தில் (13.08.2026) இடம்பெற்றது மாவட்ட மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சட்டவிரோத மீன்பிடி, காலநிலை மாற்றத்தால் மீன்ப்படியாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, மானிய முறையில் எரிபொருள் வளங்கள், ஏற்றுமதி, என பலதரப்பட்ட விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன. இதன்போது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கடல்

மட்டக்களப்பில் நடைபெற்ற மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம். Read More »