மட்டக்களப்பில் நடைபெற்ற மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஏற்பாட்டில் மாவட்ட பழைய செயலக மாநாட்டு  மண்டபத்தில் (13.08.2026) இடம்பெற்றது

மாவட்ட மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சட்டவிரோத மீன்பிடி, காலநிலை மாற்றத்தால் மீன்ப்படியாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, மானிய முறையில் எரிபொருள் வளங்கள், ஏற்றுமதி, என பலதரப்பட்ட விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.

இதன்போது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கடல் தொழில் திணைக்களத்தின் அதிகாரிகள், மாவட்ட மீன்பிடி சங்கங்களின்  பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டனர்.

Share the Post: