கல்குடா (எஸ்.எம்.எம்.முர்ஷித்):
ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்தில் வாழ்க்கைத்திறன் விருத்தி குறுங்கால கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 70 இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் பயிற்சி நிலைய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
“திறனை வளர்ப்போம், தலைமைத்துவத்தை உருவாக்குவோம், எதிர்காலத்தை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்நிகழ்வு, ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது.
இக் குறுங்கால கற்கைநெறியின் போது, AI Tools & Goal Setting (செயற்கை நுண்ணறிவு தொழினுட்பக் கருவிகள் மற்றும் இலக்கு நிர்ணயம்) தொடர்பான பகுதிக்கு முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோத் வளவாளராகக் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.
அத்துடன், மென்திறன் விருத்தி (Soft Skills) தொடர்பான பயிற்சிப் பகுதிக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.ஐ.றம்சீ வளவாளராகக் கலந்து சிறப்பித்தார்.

கற்கைநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை அதிதிகள் கரங்களால் வழங்கி வைத்தனர்.
- பிரதம அதிதி: ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.எம்.ஹலால்தீன்
- விசேட அதிதி: ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி எம்.எச்.எம்.பாறூக்
- சிறப்பு அதிதி: தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரி கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் (மதனி)
மேலும், பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.மாஜிதா, பிரஜா சக்தி தவிசாளர்களான எம்.பி.எம்.அஹமட் இர்சாத், ஐ.எம்.முபாஸ், Green Harvest Solution co. (Pvt) Ltd நிறுவனத்தின் ஸ்தாபகர் கே.எல்.எம்.ஹியாஸ், கோறளைப்பற்று மேற்கு மத்தியஸ்த சபை தவிசாளரும் ஓட்டமாவடி பொது நூலகருமான எம்.சி. சரீப் ஹுஸைன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.






