• Home
  • உள்ளூர் செய்திகள்
  • ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உள்ளூராட்சி வார நிறைவு விழா வந்தாறுமூலையில் கோலாகலம்: பாடசாலை மாணவர்களும் உத்தியோகத்தர்களும் கௌரவிப்பு!

ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உள்ளூராட்சி வார நிறைவு விழா வந்தாறுமூலையில் கோலாகலம்: பாடசாலை மாணவர்களும் உத்தியோகத்தர்களும் கௌரவிப்பு!

ஏறாவூர்பற்று பிரதேச சபையின் ஏற்பாட்டில் “வளமான நாடு – அழகான வாழ்வு; புத்துயிர்க்கும் புதுநகரம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் விழா, நேற்று (19.09.2026) வந்தாறுமூலை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பாரம்பரிய வரவேற்பைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது. தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் அதிதிகள் உரைகள் இடம்பெற்றன.

விழாவின் சிறப்பம்சமாக, கலை நிகழ்வுகளில் திறமைகளை வெளிப்படுத்திய பாடசாலை மாணவர்களுக்குப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஏறாவூர்பற்று பிரதேச சபையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சேவையைப் பாராட்டி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், மா

Share the Post: