• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மூதூரின் அடையாளத்தை பறைசாற்றும் ‘தடயம்’ அருங்காட்சியகத்தை ஆர்வத்துடன் பார்வையிட்ட பாலர் பாடசாலை மாணவர்கள்!

மூதூரின் அடையாளத்தை பறைசாற்றும் ‘தடயம்’ அருங்காட்சியகத்தை ஆர்வத்துடன் பார்வையிட்ட பாலர் பாடசாலை மாணவர்கள்!

மூதூர் பிரதேசத்தின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘மூதூர் தடயம்’ அருங்காட்சியகத்தை, நெய்தல் நகர் பாலர் பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுப்பயணமாகச் சென்று பார்வையிட்டனர்.

மாணவர்களின் பாடசாலைக் கல்வியுடன் இணைந்த வகையில், மூதூரின் தொன்மையான வரலாறு, பாரம்பரியப் பொருட்கள், பழங்கால வாழ்வியல் முறைகள் மற்றும் பிரதேசத்தின் முக்கிய வரலாற்றுச் சான்றுகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இக் கல்விச் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய பொருட்கள் மற்றும் மூதூரின் கடந்தகால வாழ்வியலை பிரதிபலிக்கும் பல்வேறு சான்றுகளை சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன், அவற்றின் பின்னணிகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டனர்.

Share the Post: