இந்தியாவிற்குச் செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இந்திய விசா தொடர்பான விளக்கத்தை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்
ஹஸ்பர் ஏ.எச்- இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமூகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும். உலகின் பல நாடுகளைப் போலவே, இந்தியாவிற்குப் பயணிக்கும் இலங்கையர்களும் இ-விசா (E-Visa) வசதியைப் பெற முடியும். எனினும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விண்ணப்பிக்க விரும்பும் இலங்கைப் பிரஜைகள், ஆன்லைனில் விண்ணப்பித்து, கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரக விண்ணப்ப மையங்களில் (Indian Consular Application Centres – ICAC) தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க










