அகில இலங்கை எல்.வி. ஜயவீர குத்துச்சண்டை போட்டி: கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியிலிருந்து 14 வீரர்கள் களம்!
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2026 ஆம் ஆண்டுக்கான ‘எல்.வி. ஜயவீர ஞாபகார்த்த கிண்ண’ (L.V. Jayaweera Trophy) குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்காக, கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் (Cambridge College, Kotagala) குத்துச்சண்டை அணி தகுதிபெற்று களமிறங்கியுள்ளது. இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டை சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மிகவும் மதிப்புமிக்க இப்போட்டித் தொடரில், இம்முறை கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 14 மாணவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 10 ஆண் மாணவர்களும், 04 பெண் மாணவிகளும் அடங்குகின்றனர். மலையகப்









