• Home
  • உள்ளூர் செய்திகள்
  • செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் விளையாட்டரங்கு திறப்பு விழாவும்.

செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் விளையாட்டரங்கு திறப்பு விழாவும்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கண்ணகி விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு திறப்பு விழாவும், செட்டிபாளையம் பிறிமியன் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (17.04.2026) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது அவரது பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த விளையாட்டரங்கிற்கு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இவ்விளயாட்டரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது புதிதாக அமைக்கப்பட்ட ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதோடு, செட்டிபாளையம் பிறிமியன் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் நடைபெற்றது.

விiளாட்டுக் கழகத்தின் தலைவர் வேணுகோபாலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டு உத்தியோகத்தர்கள், கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Share the Post: