admin

சுருக்கு வலை மீன்பிடி பயன்பாட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி தெரிவிப்பு..!

(ஹஸ்பர் ஏ ஹலீம்) மீனவர்கள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் குறிப்பாக வடக்கில் இந்திய மீனவர்களின் அச்சுறுத்தல் மற்றும் அவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் வடக்கு மீனவர்களின் தொழில் பாதிப்படைகின்றது. அதேவேளை கிழக்கில் தடைசெய்யப்பட்ட சுருக்குவலை பயன்பாட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் எரிபொருள் விலை

சுருக்கு வலை மீன்பிடி பயன்பாட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி தெரிவிப்பு..! Read More »

பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகை உரிய மாணவியிடம் மீள ஒப்படைப்பு : நேர்மையை வெளிப்படுத்திய தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவிக்கு பாராட்டு

டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகை உரிய மாணவியிடம் மீள ஒப்படைப்பு : நேர்மையை வெளிப்படுத்திய தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவிக்கு பாராட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது மாணவி ஒருவரால் தவறவிடப்பட்ட பெறுமதியான தங்க நகை, அதனை கண்டெடுத்த மற்றுமொரு மாணவியின் நேர்மையான செயற்பாட்டினால் உரிய மாணவியிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழா நடைபெற்ற ஜூலை 25ஆம் திகதி, பல்கலைக்கழக வளாகத்தில் பெறுமதியான தங்க நகை ஒன்று கிடந்த நிலையில், அதனை

பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகை உரிய மாணவியிடம் மீள ஒப்படைப்பு : நேர்மையை வெளிப்படுத்திய தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவிக்கு பாராட்டு Read More »

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் சேகரிக்கப்படும் கழிவுகளை முகாமை செய்துவது தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமை செய்து அவற்றை அகற்றுவது தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறும் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை (11.08.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கரையோரம் பேணல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பொலிசார், கடற்படை,

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் சேகரிக்கப்படும் கழிவுகளை முகாமை செய்துவது தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல். Read More »

மொனராகலையில் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது இ.போ.ச பஸ்: சாரதி தீவிர சிகிச்சை பிரிவில், பயணிகள் காயம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பஸ் ஒன்று இன்று (11) அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. புத்தள – மஹகொடய பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி மொனராகலை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், காயமடைந்த ஏனைய பயணிகளும் சிகிச்சைக்காக அதே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொனராகலையில் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது இ.போ.ச பஸ்: சாரதி தீவிர சிகிச்சை பிரிவில், பயணிகள் காயம்! Read More »

ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களாகச் செயற்படவுள்ள வளவாளர்களை உருவாக்கும் பயிற்சி

நூருல் ஹுதா உமர்) கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான செயலமர்வு- கிழக்கு மாகாண கல்வி வலயங்களைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்கள் பங்கேற்பு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களாகச் செயற்படவுள்ள வளவாளர்களை உருவாக்கும் Training of Trainers (ToT) பயிற்சி செயலமர்வு நடைபெற்றது. மகாஓயா, அம்பாறை, திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட ஆங்கில

ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களாகச் செயற்படவுள்ள வளவாளர்களை உருவாக்கும் பயிற்சி Read More »

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும் – இம்ரான் எம். பி

ஹஸ்பர் ஏ.எச்- முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான  தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடை தடை குறித்து இன்று (11)ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் சில அரச உத்தியோகத்தர்களால் தேவையற்ற தலையீடுகளுக்கு உள்ளாகின்றது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஒவ்வொரு சமூகத்தவரதும் சமய கலாசார உரிமைகள்

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும் – இம்ரான் எம். பி Read More »

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!

(கனகராஜா சரவணன்) கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம், இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்திற்கு மத்தியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி மாமாங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் ஒருங்கே கொண்ட

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்! Read More »

வாகனேரி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் உறுதியளிப்பு

மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று தெற்கு – வாகனேரி பகுதியில் போதிய நீர்வளம் இருந்தபோதிலும், பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் குடிநீர் பிரச்சினை இதுவரையில் தீர்க்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைவாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அண்மையில் அப்பகுதிக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்டார். வாகனேரிக் குளத்தைப் பார்வையிட்ட அவர், மக்களின் குடிநீர் தேவைகள் மற்றும் சவால்கள் குறித்துக் கேட்டறிந்ததுடன் பின்வரும்

வாகனேரி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் உறுதியளிப்பு Read More »

40 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார் பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்   40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை(10)  கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கை அக்கரைப்பற்று – சாகாமம் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. பொறிவைத்து பிடிபட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட

40 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது Read More »

செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் குறித்து விசேட பயிற்சி அளிப்பு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் குறித்து விசேட பயிற்சி அளிப்பு பாறுக் ஷிஹான் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொடர்பான விசேட பயிற்சி நிகழ்வு நேற்றைய தினம் (10) நடைபெற்றது. வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில், செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள், அதன் நடைமுறைப் பயன்பாடுகள் மற்றும் நவீன AI கருவிகளை அன்றாட

செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் குறித்து விசேட பயிற்சி அளிப்பு Read More »