• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • சுருக்கு வலை மீன்பிடி பயன்பாட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி தெரிவிப்பு..!

சுருக்கு வலை மீன்பிடி பயன்பாட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி தெரிவிப்பு..!

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

மீனவர்கள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் குறிப்பாக வடக்கில் இந்திய மீனவர்களின் அச்சுறுத்தல் மற்றும் அவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் வடக்கு மீனவர்களின் தொழில் பாதிப்படைகின்றது. அதேவேளை கிழக்கில் தடைசெய்யப்பட்ட சுருக்குவலை பயன்பாட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தின் மத்தியில் மீன்பிடித்துறையில் ஈடுபடும் மீனவர்களின் தொழில் நடவடிக்கை இந்த சட்டவிரோத சுருக்குவலை பயன்பாட்டால் கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுருக்குவலை மீன்பிடி பயன்பாட்டால் மீன்களின் இனப்பெருக்கமும் அதன் வளர்ச்சியும் பாதிப்படைகின்றது.

எனவே சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை உடனடியாக நிறுத்த மீன்பிடித்துறை அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றார் சின்ன மோகன். 

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் கூறியது போன்று மைலத்தமடு மேச்சல்தரை பகுதியிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும்  2 ஆம் திகதி சத்வீக போராட்டத்திற்கும் அழைப்பு  – ஸ்ரீநேசன் எம்பி கோரிக்கை.