• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கிளிநொச்சியில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மீது மற்றொரு லொறி மோதி விபத்து: உதவியாளரான இளைஞர் பரிதாப பலி!

கிளிநொச்சியில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மீது மற்றொரு லொறி மோதி விபத்து: உதவியாளரான இளைஞர் பரிதாப பலி!

கிளிநொச்சி, தொண்டமாநகர் பகுதி A9 பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சரக்குகளை ஏற்றிச் சென்ற இரு பாரஊர்திகள் (லொறிகள்) ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

முன்னால் சென்ற பாரஊர்தி வீதியோரமாக நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பொருட்களை இறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டப்போது, பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு பாரஊர்தி கட்டுப்பாட்டை இழந்து அதன் மீது பலமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் பின்னால் வந்த பாரஊர்தியில் உதவியாளராகப் பணியாற்றிய 21 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: