மீன் ஏற்றுமதி வருமானத்தை 2030ஆம் ஆண்டளவில் 600 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
கடந்த இரண்டு ஆண்டுகளில் மீன் ஏற்றுமதி மூலம் 6,888.9 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது – இனவாத, மதவாத அரசியலுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தல்! இலங்கையின் ஏற்றுமதித் துறையை மேலும் வலுப்படுத்தி, குறிப்பாக மீன்பிடித் துறையின் ஊடாக நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்களை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்று (03) பாராளுமன்றத்தில் நடைபெற்ற நாட்டின் ஏற்றுமதித் துறையின்










