முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் – ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியிலிருந்து மன்னார் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை நிறைவு செய்துவிட்டு, நேற்று (03) அதிகாலை வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
மாங்குளம் – ஒட்டுசுட்டான் வீதியின் 15 ஆம் கி.மீ பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் அவர்கள் பயணித்த கார் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதியின் தூக்கக் கலக்கமே இவ்விபட்டிற்கான முதன்மைக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


Views: 3




