admin

வாழைக்குலைக்கு ரசாயன மருந்து தெளித்தவருக்கு 6 மாத சிறை: யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சிச் சம்பவம்!

யாழ்ப்பாணம்: யாழ். நீர்வேலி பகுதியில் அன்னதானத்திற்காக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 424 கிலோகிராம் எடையுள்ள வாழைக்குலைகளுக்கு, செயற்கையாக பழுக்க வைப்பதற்காக அபாயகரமான ரசாயன மருந்தை தெளித்து விற்பனை செய்ய முயன்ற நபருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீர்வேலிப் பகுதியில் பெருமளவு வாழைக்குலைகளுக்கு ரசாயனம் தெளிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) திடீர் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது, மனித உடலுக்கு

வாழைக்குலைக்கு ரசாயன மருந்து தெளித்தவருக்கு 6 மாத சிறை: யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சிச் சம்பவம்! Read More »

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு: ஊழியர்கள் 7 பேர் படுகாயம்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக சிறப்பு வைத்தியசாலையின் சமையலறையில் இன்று (26) அதிகாலை 4:30 மணியளவில் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் வைத்தியசாலை ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தின் போது சமையலறைப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக வைத்தியசாலையின் சமையலறை மற்றும் கட்டிடப் பகுதிக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு: ஊழியர்கள் 7 பேர் படுகாயம்! Read More »

பொதுமக்களின் தாராள பங்களிப்பில் சம்மாந்துறைக்கு புதிய ஜனாஸா வாகனம் அர்ப்பணிப்பு!

சம்மாந்துறை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் நீண்ட நாள் அவசர தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பொதுமக்களின் பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்ட புதிய ஜனாஸா வாகனம் (25) பாவனைக்கு கையளிக்கப்பட்டது. பொதுமக்கள், உள்ளூர் அமைப்புகள் மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை ஆகியோரின் கூட்டு முயற்சியினாலும், நிதிப் பங்களிப்பினாலும் இச்சேவை சாத்தியமாக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், பிரார்த்தனைகளுடன் ஜனாஸா வாகனத்தின் வெள்ளோட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் ஒப்படைக்கப்பட்டது.

பொதுமக்களின் தாராள பங்களிப்பில் சம்மாந்துறைக்கு புதிய ஜனாஸா வாகனம் அர்ப்பணிப்பு! Read More »

ஜப்பான் தூதரக அதிகாரிகளின் திருகோணமலைக்கு கள விஜயம்…. அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு 

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், அவர்களின் அனுசரணையுடனும் ஒருங்கிணைப்புடனும் ஜப்பான் தூதரகத்தில் இடம்பெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, தி/இறக்கக்கண்டி அல் ஹம்ரா பாடசாலைக்கு ஜப்பான் தூதரக அதிகாரிகள் 22 செப்டெம்பர் 2026 அன்று கள விஜயம் மேற்கொண்டனர். இதன்போது, தூதரக அதிகாரிகள் பாடசாலை வளாகத்தை பார்வையிட்டதுடன், வகுப்பறைகளின் தற்போதைய நிலைமை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்  இம்ரான் மஹரூப் MP  இனால் முன்வைக்கப்பட்டுள்ள தேவைகள் தொடர்பிலும் நேரடியாக அவதானித்து அறிந்து கொண்டனர். இவ்விஜயத்தில்  இம்ரான் மஹரூப்,

ஜப்பான் தூதரக அதிகாரிகளின் திருகோணமலைக்கு கள விஜயம்…. அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு  Read More »

மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக என்.மணிவண்ணன் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, இன்று (25) என். மணிவண்ணன் அவர்களை கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் புதிய செயலாளராகவும், செல்வி. எல். பிரசாந்தன் அவர்களை பிரதி தலைமைச் செயலாளராகவும் நியமித்தார். குறித்த நியமனங்களை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநர் இதனை வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக முன்னர் கடமையாற்றியவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக

மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக என்.மணிவண்ணன் நியமனம் Read More »

இந்தியப் பிரஜைகளின் பல இலட்சம் ரூபாய் பணம் திருட்டு: இரு பெண்கள் கைதுநீதிமன்ற வளாக சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் தீவிர விசாரணை

(பாறுக் ஷிஹான்) சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இந்தியப் பிரஜைகள் தவறவிட்ட சுமார் 31 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை ரூபாய் பெறுமதியுடைய அமெரிக்க டொலர்களை   திருடிய குற்றச்சாட்டின் பேரில்  இரு பெண்கள் சம்மாந்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றிற்காக இந்தியா – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர்   வியாழக்கிழமை (24) வருகை தந்திருந்தனர். வழக்கு விசாரணையின் போது நீதவான் கோரிய

இந்தியப் பிரஜைகளின் பல இலட்சம் ரூபாய் பணம் திருட்டு: இரு பெண்கள் கைதுநீதிமன்ற வளாக சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் தீவிர விசாரணை Read More »

இந்தியா மற்றும் இலங்கை போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கு இடையிலான 5-வது தலைமை இயக்குநர்  (DG)  (அளவிலான பேச்சுவார்த்தை கொழும்பில் —

(கனகராஜா சரவணன்) இந்தியா மற்றும் இலங்கை போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கு இடையிலான 5-வது தலைமை இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தை, கடந்த 23 புதன்கிழமை கொழும்பில் இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்  ; (NCB)  துணைத் தலைமை இயக்குநர் ஆர். சுதாகர் தலைமையிலான குழுவுக்கும் இலங்கை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்  (PNB)       உதவி பொலிஸ் மா அதிபர் (டி.ஜ.ஜீ)  கே.டி.ஜி.எல். அசோக தர்மசேன தலைமையிலான குழுவுக்கு இடையே இடம்பெற்றது 2025-ல் ஏப்பிரல்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா மற்றும் இலங்கை போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கு இடையிலான 5-வது தலைமை இயக்குநர்  (DG)  (அளவிலான பேச்சுவார்த்தை கொழும்பில் — Read More »

மகாகொடயாயவில் இரு பேருந்துகள் மோதி விபத்து: 11 பயணிகள் காயம்!

மகாகொடயாய – சமகம்கிராம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெல்லவாயிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (SLTB) பேருந்து, பயணிகளை இறக்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த வேளையில், மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து அதன் பின்புறத்தில் பலமாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த 11 பயணிகளும் உடனடியாக மீட்கப்பட்டு புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேரின் நிலைமையைக் கருத்திற்

மகாகொடயாயவில் இரு பேருந்துகள் மோதி விபத்து: 11 பயணிகள் காயம்! Read More »

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு  சித்தாண்டியில் கணவனின் தாயாரை சந்திக்க சென்ற மனைவியின் கழுத்தில் கத்தியால்  குத்தி கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரான தங்கராசா பிரதீபா என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தெரியவருவதாவது மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளியான மூத்தவன்

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்– Read More »

தம்பலகாமம் பிரதேசத்தில் இளவயது திருமணத்தை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ எச் – தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் சிறுவர், மகளிர் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இளவயது திருமணத்தை குறைப்பதற்காக முஸ்லிம் பள்ளிவாயல் நிர்வாகிகள் மேற்கொள்ளக்கூடிய பொறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு (24) தம்பலாகாமம் பொலிஸ் நிலையத்தில் இடம் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பொலிஸ் நிலைய அதிகாரிகள், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச

தம்பலகாமம் பிரதேசத்தில் இளவயது திருமணத்தை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் Read More »