சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடுவோர் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் : பொறுப்பற்ற கருத்து சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்
நூருல் ஹுதா உமர் கல்விக்கு ஏழ்மை ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என்றும், இன்றைய நவீன உலகில் கல்வியுடன் தொழில்நுட்ப அறிவும், மொழியறிவும் இளைஞர்களுக்கு அத்தியாவசியமானதாகும் என்றும் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தெரிவித்தார். ஈ-பெஸ்ட் கெம்பஸின் கல்முனைக் கிளையில் பாடநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (26) காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு










