-ஹஸ்பர் ஏ எச் –
50ஆவது மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கரப்பந்தாட்ட போட்டி தொடரில் தம்பலாகாமம் பிரதேச அணியினர் மாகாண சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் (26.09.2026) இடம் பெற்ற போட்டியில் தம்பலாகாமம் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண மட்டப் போட்டியில் களமிறங்கிய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடத்தைப் பெற்று மாகாண சம்பியனாக முடிசூடியுள்ளது.
தம்பலாகாமம் பிரதேச அணியொன்று வரலாற்றில் முதன்முறையாக மாகாண மட்ட அணியாக தெரிவாகி, அதே தொடரில் மாகாண சம்பியன் பட்டத்தை வென்றிருப்பது பிரதேச விளையாட்டுத்துறைக்கு பெருமை சேர்க்கும் முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது.

இந்த வெற்றிக்குப் பின்னணியில் தம்பலாகாமம் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் திரு கே.எம். ஹாரிஸ் அவர்களின் அர்ப்பணிப்பும், திட்டமிட்ட பயிற்சியும் முக்கிய பங்காற்றியுள்ளன. வீரர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து, அவர்களின் திறமைகளை மேம்படுத்தியதன் பயனாகவே இந்த வரலாற்று வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாண மட்டத்தில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ள தம்பலாகாமம் அணி, தற்போது தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
மாகாண சம்பியன் பட்டத்துடன் தேசிய மட்டத்தை நோக்கி பயணிக்கும் தம்பலாகாமம் அணிக்கு பிரதேச மக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.




