மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக என்.மணிவண்ணன் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, இன்று (25) என். மணிவண்ணன் அவர்களை கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் புதிய செயலாளராகவும், செல்வி. எல். பிரசாந்தன் அவர்களை பிரதி தலைமைச் செயலாளராகவும் நியமித்தார்.

குறித்த நியமனங்களை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநர் இதனை வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக முன்னர் கடமையாற்றியவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக என்.மணிவண்ணன் நியமிக்கப்பட்டார்

Share the Post: