admin

மண் மாபியா தலையீட்டால் இடமாற்றம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர்-சம்மாந்துறையில் சம்பவம்

சித்திரை புத்தாண்டு தினத்தில் சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரத்தை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் என். றிபாய்டீன் அம்பாறை மாவட்டத்திற்கு உடனடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறித்த இடமாற்றம் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பகுதியில் உள்ள சட்டவிரோத மண் மாபியா மேற்கொள்ளும் நபரால் குறித்த உப பொலிஸ் பரிசோதகருக்கு நேரடியாக சொல்லப்பட்டு தற்போது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மண் மாபியா தலையீட்டால் இடமாற்றம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர்-சம்மாந்துறையில் சம்பவம் Read More »

செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் விளையாட்டரங்கு திறப்பு விழாவும்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கண்ணகி விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு திறப்பு விழாவும், செட்டிபாளையம் பிறிமியன் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (17.04.2026) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது அவரது பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த விளையாட்டரங்கிற்கு 4 கோடி ரூபாய்

செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் விளையாட்டரங்கு திறப்பு விழாவும். Read More »

மீண்டும் ஒரு பேரதிர்ச்சி: 331 குழந்தைகளுக்கு HIV தொற்று – ஊசிகளை மீண்டும் பயன்படுத்திய கொடூரம்!

பாகிஸ்தானின் மருத்துவத்துறையில் நிலவும் அலட்சியம் மீண்டும் ஒருமுறை உலகையே உலுக்கியுள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் ஒரே ஊசியை பல குழந்தைகளுக்குப் பயன்படுத்தியதால், சுமார் 331 குழந்தைகள் எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நடந்தது என்ன?பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், டான்சா நகரில் உள்ள THQ அரசு மருத்துவமனையில், கடந்த 2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஊசிகளை (Syringes)

மீண்டும் ஒரு பேரதிர்ச்சி: 331 குழந்தைகளுக்கு HIV தொற்று – ஊசிகளை மீண்டும் பயன்படுத்திய கொடூரம்! Read More »

சித்திரை வருடப்பிறப்பில் திடீர் பரிசோனை களுவாஞ்சிகுடி பகுதியில் 57.5 கிலோ கிராம் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி கண்டு பிடிப்பு.

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட கோழி இறைச்சி கடையொன்றில் 57.5 கிலோ கிராம் ஏற்கனவே இறந்த கோழிகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தமை சித்திரை வருடப்பிறப்பான இன்றயத்தினம் செவ்வாய்கிழமை(14.04.2026) பொதுச் சுகாதார பரிசோதகரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், உரிய வியாபாரிக்கு எதிராக் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட இறைசிக் கடைகள் அனைத்தும் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரினால் விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கையின்

சித்திரை வருடப்பிறப்பில் திடீர் பரிசோனை களுவாஞ்சிகுடி பகுதியில் 57.5 கிலோ கிராம் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி கண்டு பிடிப்பு. Read More »

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?

பாறுக் ஷிஹான் video link-https: //fromsmash.com/bejS3U5Pgq-dt இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது.அது போன்று தான் இன்று அபிவிருத்தி என்ற என்ற விடயம் ஆராயப்படும் போது இடம் இல்லை என்ற சொல் அதிகம் எம்மிடையே உச்சரிக்கப்படும் சொற்பிரயோகம் ஆகும்.தற்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கட்டட எச்சம் கூட இவ்வாறான நிலைமையினை கடந்த 25 வருடங்களுக்கு முகம் கொடுத்து

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்? Read More »

வவுணதீவில் விசேட அதிரடிப்படை ஜீப் வண்டி – சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு: விசேட அதிரடிப்படை சாரதி கைது

(கனகராஜா சரவணன்) வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பருத்திச்சேனை சந்தியில், சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் பிரயாணித்த 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து தொடர்பில் விசேட அதிரடிப்படை சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. கன்னங்குடா, புதுமண்டபத்தடியைச் சேர்ந்த 67 வயதுடைய அப்புஹாமி கிருஷ்ணபிள்ளை (அல்லது கிருஷ்ணபாலன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்லடி விசேட அதிரடிப்படை முகாமில்

வவுணதீவில் விசேட அதிரடிப்படை ஜீப் வண்டி – சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு: விசேட அதிரடிப்படை சாரதி கைது Read More »

அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஜனாதிபதி அநுர குமார ஆசி பெற்றார்

கண்டி: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) முற்பகல் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். மகா விகாரவம்சிக சியாமோபாலி மகா பீடத்தின் அஸ்கிரி தரப்பு மகாநாயக்கர், அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கும் அவரோடு சென்ற குழுவினருக்கும் ‘செத்பிரித்’ பாராயணம் செய்து தமது ஆசீர்வாதங்களை வழங்கினர். இந்த

அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஜனாதிபதி அநுர குமார ஆசி பெற்றார் Read More »

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரானியர்கள் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்!

அமெரிக்கப் தாக்குதலில் காயமடைந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரானியப் பிரஜைகள் விசேட விமானம் மூலம் நேற்று (14) இரவு மீண்டும் ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஈரானுக்குச் சொந்தமான ‘மெராஜ்’ விமான சேவைக்கு (Meraj Air Line) சொந்தமான IRAN-09 என்ற விசேட விமானம், 13 ஆம் திகதியன்று மாலை 4:00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரானியர்கள் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்! Read More »

பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற பல நிகழ்வுகள்.

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 20வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (12.04.2026) பிரம்மாண்டமான துவிச்சக்கர வண்டி பேரணியும் மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பில் இடம்பெற்றன. மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியிலுள்ள பாரதியார் சிலைக்கு முன்பாக காலை ஆரம்பிக்கப்பட்ட இத்துவிச்சக்கர வண்டி பேரணியானது, கல்லடி மணிக் கூட்டுக் கோபுரம் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்பு காந்தி பூங்காவை வந்தடைந்தது. சமூக விழிப்புணர்வை மையப்படுத்தி நடத்தப்பட்ட இப்பேரணியில் திரளானோர் கலந்து கொண்டனர். கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் லயன்ஸ்

பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற பல நிகழ்வுகள். Read More »

சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பிலான கலந்துரையாடல்.

சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் தற்போது அதிகம் நிலவும் நிலவும் பிரச்சனைகள் தொடர்பிலும், அவற்றுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை(11.04.2026) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது. கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் புகாரி முகம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்வலர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சிறுபான்மை சமூகத்தின் மத்தியில்

சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பிலான கலந்துரையாடல். Read More »