கண்டி: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) முற்பகல் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
மகா விகாரவம்சிக சியாமோபாலி மகா பீடத்தின் அஸ்கிரி தரப்பு மகாநாயக்கர், அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கும் அவரோடு சென்ற குழுவினருக்கும் ‘செத்பிரித்’ பாராயணம் செய்து தமது ஆசீர்வாதங்களை வழங்கினர்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியுடன் பின்வரும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்:
வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்.
ஏனைய அரச உயரதிகாரிகள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள்.
இச்சந்திப்பு ஜனாதிபதியின் கண்டி விஜயத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




