admin

மூதூரில் மாணவர்களுக்கான பிரமாண்ட கால்பந்தாட்ட பயிற்சி முகாம்: 20 பாடசாலைகளிலிருந்து 240 மாணவர்கள் பங்கேற்பு!

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில், மூதூர் பிரதேசத்தில் கால்பந்தாட்ட விளையாட்டினை ஊக்குவிக்கும் நோக்குடன் பாடசாலை மாணவர்களுக்கான விசேட ஒருநாள் பயிற்சி முகாம் இன்று சனிக்கிழமை (23) மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட 20 முன்னணிப் பாடசாலைகளைச் சேர்ந்த 240 மாணவர்கள் இப்பயிற்சி முகாமில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, உதைப்பந்தாட்டத்தின் அடிப்படை உத்திகள், நுட்பங்கள் மற்றும் முக்கிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர். இவ் விசேட பயிற்சி முகாமில் இலங்கை

மூதூரில் மாணவர்களுக்கான பிரமாண்ட கால்பந்தாட்ட பயிற்சி முகாம்: 20 பாடசாலைகளிலிருந்து 240 மாணவர்கள் பங்கேற்பு! Read More »

நிதிப் பற்றாக்குறை மற்றும் சட்டக் குளறுபடிகள் காரணமாக இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் சாத்தியமில்லை: யாழ்ப்பாணத்தில் டில்வின் சில்வா திட்டவட்டம்!

இலங்கையில் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எத்தகைய எண்ணமும் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிதி, நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக முழுமையாகச் செலவிடப்பட்டுள்ளதே இதற்குக் பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் நேற்று தேசிய மக்கள் சக்தியின் (NPP) புதிய மக்கள் தொடர்பு

நிதிப் பற்றாக்குறை மற்றும் சட்டக் குளறுபடிகள் காரணமாக இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் சாத்தியமில்லை: யாழ்ப்பாணத்தில் டில்வின் சில்வா திட்டவட்டம்! Read More »

கீவ் நகரில் தொடரும் ரஷ்ய தாக்குதல்கள்: பேரழிவுக்குள்ளான கட்டிடங்கள், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள்!

உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) மீது ரஷ்யா நடத்திய கொடூரமான தாக்குதல்களுக்குப் பின்னர், அந்நகரத்தின் தற்போதைய கோர நிலையை வெளிப்படுத்தும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை வீச்சுகள் காரணமாக கீவ் நகரிலுள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளும், பொதுக்கட்டடிடங்களும் பலத்த சேதமடைந்து இடிபாடுகளாகக் காட்சியளிக்கின்றன. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகள் மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டு

கீவ் நகரில் தொடரும் ரஷ்ய தாக்குதல்கள்: பேரழிவுக்குள்ளான கட்டிடங்கள், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள்! Read More »

கோவை சிறுமி தர்ஷினி படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நைனா நாகேந்திரன் ஆறுதல்!

கோயம்புத்தூர் — சூலூர் பகுதியில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமையின் பின் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 10 வயதுச் சிறுமி தர்ஷினியின் குடும்பத்தினரை, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நைனா நாகேந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இன்று (24) ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் இல்லத்திற்குச் சென்ற மாநிலத் தலைவர் உள்ளிட்ட பா.ஜ.க உயர்மட்டக் குழுவினர், உயிரிழந்த சிறுமியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், சோகத்தில் மூழ்கியுள்ள பெற்றோருக்கும் உறவினர்களுக்கும்

கோவை சிறுமி தர்ஷினி படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நைனா நாகேந்திரன் ஆறுதல்! Read More »

சந்தேக நபர்கள் இருவர் போதைப் பொருளுடன் கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

பாறுக் ஷிஹான் இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. குறித்த தகவலுக்கமைய சனிக்கிழமை(23) மாலை  சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர்   டி.எஸ்.இந்திக தலைமையிலான  பொலிசார் விசேட தேடுதல் நடவடிக்கையில்

சந்தேக நபர்கள் இருவர் போதைப் பொருளுடன் கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம் Read More »

பலத்த காற்றினால் பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில்  (2026.05.23) திடீரென வீசிய பலத்த காற்றின் காரணமாக முள்ளிப்பொத்தானை (96) – கிண்ணியா வீதியில் முள்ளிப்பொத்தானை சிங்கள கனிஷ்ட வித்தியாலயத்திற்கு முன்பு பாரிய மரமொன்று வீதியின் நடுவில் முறிந்து விழுந்தது.  இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது. இதனை தம்பலகாமம் பிரதேச சபை  தவிசாளர் எச்.தாலிப் அலி, உறுப்பினர், ஊழியர்கள் முன்னின்று  மற்றும் தம்பலகாமம் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மரத்தை வெட்டி அகற்றப்பட்டது. உயிர்ச் சேதங்கள்

பலத்த காற்றினால் பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை Read More »

மட்டக்களப்பில் இடம்பெற்ற முழு நாடும் ஒன்றாக தேசிய நிகழ்ச்சித் திட்ட விழிப்புணர்வுப்பேரணி!

முழு நாடும் ஒன்றாக தேசிய நிகழ்ச்சித் திட்ட விழிப்புணர்வுப் பேரணி நேற்று சனிக்கிழமை (23) மட்டக்களப்பில் இடம்பெற்றது. முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்ட நிகழ்வு தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு நடைபவனி தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் ஆகியன ஒன்றிணைந்து முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு திட்டத்தை முன்னிட்டு இளைஞர் பேரணி மற்றும் நடைபவனி மங்களராமய விகாரையில் இருந்து காந்தி

மட்டக்களப்பில் இடம்பெற்ற முழு நாடும் ஒன்றாக தேசிய நிகழ்ச்சித் திட்ட விழிப்புணர்வுப்பேரணி! Read More »

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் வடிகான் அமைப்பு வேலைகள்: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியின் (Fisheries Department Road) 9 ஆம் கிளைச் சந்தியில் தற்போது புதிய வடிகான் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வடிகான் கட்டுமான வேலைகள் காரணமாக, இப்பாதையூடான போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வீதியைப் பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தற்காலிகமாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நன்மையைக் கருதி மேற்கொள்ளப்படும் இக்கட்டுமானப் பணிகளுக்கு

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் வடிகான் அமைப்பு வேலைகள்: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்! Read More »

வைகாசிப் பெருவிழா ஆரம்பம்: களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருக்கதவு திறக்கப்பட்டது!

கிழக்கிலங்கையின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா இன்று அதிகாலை திருக்கதவு திறத்தலுடன் பக்திப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இன்று அதிகாலை மங்கள வாத்தியங்கள் முழங்க, “அரோகரா… அரோகரா…” என்ற பக்தர்களின் பக்தி முழக்கங்களுக்கு மத்தியில் அம்மனின் திருக்கதவு திறக்கப்பட்டது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும் ஆன்மீக மரபாகவும் விளங்கும் இவ்வாலயத்தின் இந்த புனித தருணம், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. பெருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு

வைகாசிப் பெருவிழா ஆரம்பம்: களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருக்கதவு திறக்கப்பட்டது! Read More »

இணையவழி ஆபத்துகளில் இருந்து சமூகத்தைப் பாதுகாக்க அக்கரைப்பற்றில் ‘Digital Safety Club’ உதயம்!

இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் ஏற்படும் விபரீதங்களைத் தடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்றில் விசேட ‘டிஜிட்டல் பாதுகாப்பு கழகம்’ (Digital Safety Club) ஒன்று உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகமே விரல் நுனிக்குள் சுருங்கியுள்ள போதிலும், அதனுடன் இணைந்ததாக வெறுப்புப் பேச்சுக்கள் (Hate Speech), ஆன்லைன் பண மோசடிகள் (Online Scam), போலிச் செய்திகள்

இணையவழி ஆபத்துகளில் இருந்து சமூகத்தைப் பாதுகாக்க அக்கரைப்பற்றில் ‘Digital Safety Club’ உதயம்! Read More »